உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'டாக்சிக்' படத்தின் தபாஹி வீடியோ பாடல் வெளியீடு!

'டாக்சிக்' படத்தின் தபாஹி வீடியோ பாடல் வெளியீடு!


கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள படம் 'டாக்சிக்'. கே.ஜி.எப் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிக்கும் படம் என்பதால் இதன் மீது இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஆக்சன் கதையில் உருவாகியுள்ள இப்படத்தில் யஷ் உடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மணி வசந்த், ஹூமா குரோஷி , தாரா சுதாரியா, அக்சய் ஓபராய், சுதேவ் நாயர் மற்றும் அமித் திவாரி என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 26ம் தேதி ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் தபாஹி என்ற வீடியோ பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். அதில் யஷ் மற்றும் கியாரா அத்வானி மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். சில காட்சிகள் முகம் சுழிக்கும் வகையிலும் இருக்கிறது.

இந்த டாக்சிக் படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் கீழ் வெங்கட் கே. நாராயணா மற்றும் யஷ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ரவி பஸ்ரூர், தனிஷ்க் பாக்சி, பகீம் அப்துல்லா ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

மலையாளத்தில், 'மூத்தோன், லயர்ஸ் டைஸ்' போன்ற சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட, யதார்த்தமான கதைகளை இயக்கிய கீது மோகன்தாஸ் தான் இந்த பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் படத்தை இயக்கியுள்ளார். படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர்களை வைத்துப் பார்க்கும்போது, இப்படம் கோவாவை பின்னணியாகக் கொண்ட கடத்தல் உலகத்தை மையமாகக் கொண்ட ஒரு கேங்க்ஸ்டர் கதையாக இருக்கலாம் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !