நிறம்: ஹைப்பர் லிங்க் ஆந்தாலஜி படம்
ADDED : 4 hours ago
'அயோத்தி' படத்தின் மூலம் அறிமுகமான ப்ரீத்தி அஸ்ரானி தற்போது பிஸியான நடிகை ஆகிவிட்டார். தற்போது அவர் சோலோ ஹீரோயினாக நடித்து வரும் படம் 'நிறம்'
அவருடன் முகேன் ராவ், தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, சுரேஷ் சக்ரவர்த்தி, திருநாவுக்கரசு நடித்துள்ளனர். கே ஸ்கொயர் சினிமாஸ் சார்பில் கே.பிந்து மாதவி, பி.ராஜேஷ் தயாரித்துள்ளனர். பலராம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார். இமான் இசை அமைக்க, சான்டோனியோ டெர்சியோ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் குறித்து பலராம் கிருஷ்ணா கூறியதாவது: வடநாட்டில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து, 'நிறம்' என்ற ஹைப்பர் லிங்க் ஆந்தாலஜி படத்தை இயக்கியுள்ளேன். 6 பேரை மையமாக கொண்ட இதில் நடக்கும் சம்பவங்கள், இறுதியில் ஒன்றுடன் ஒன்று இணையும். மெடிக்கல் கிரைம் திரில்லர் என்றார்.