உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிறுமி படத்தை தவறாக வெளியிட்ட விநாயகன் மீது புகார்

சிறுமி படத்தை தவறாக வெளியிட்ட விநாயகன் மீது புகார்


'திமிரு, ஜெயிலர்' படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் விநாயகன். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். விநாயகன் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளில் சிக்குவதால் இவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தனது முகநூல் பக்கத்தில் தவறான செய்திகள் மற்றும் பெண்களின் படங்களை வெளியிட்டு பல சர்ச்சைகளை சந்தித்தார்.

இந்நிலையில் ஆலப்புழாவைச் சேர்ந்த ஒரு 14 வயது சிறுமியின் போட்டோவை நடிகர் விநாயகன் தன்னுடைய முகநூலில் வெளியிட்டார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய் ஆலப்புழா மாவட்ட சிறுவர்கள் நல ஆணையத்தில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து நடிகர் விநாயகன் மீது வழக்கு பதிவு செய்ய, மாவேலிக்கரை போலீசுக்கு குழந்தைகள் நல ஆணையம் உத்தரவிட்டது. மாவேலிக்கரை போலீசார் நேற்று விநாயகன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

அந்த சிறுமியின் படத்தை விநாயகன் தற்போது நீக்கிவிட்டார் என்றாலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !