உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிளாமருக்கு இதுதான் என் லிமிட்! எல்லை வகுத்து நடிக்கும் நடிகை கயாடு லோஹர்!

கிளாமருக்கு இதுதான் என் லிமிட்! எல்லை வகுத்து நடிக்கும் நடிகை கயாடு லோஹர்!


பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்த நிலையில், தற்போது தமிழில் 'இதயம் முரளி' படத்தை அடுத்து 'இம்மோர்ட்டல், மஞ்சணத்தி' மற்றும் சூர்யாவின் 48வது படம் என பல படங்களில் கமிட்டாகியுள்ளார். மலையாளத்தில் 'தாரம், ஐ அம் கேம்' மற்றும் தெலுங்கில் 'தி பாரடைஸ்' என அரை டஜன் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கயாடு லோஹர் அளித்துள்ள ஒரு பேட்டியில், ''இயக்குநர்கள் என்னிடம் கதை சொல்லும்போதே கிளாமர் காட்சிகளாக இருந்தால் என்னுடைய உடையின் லிமிட் இதுதான் என்று முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன். அதோடு, படத்தில் எனக்கு உடன்பாடு இல்லாத காட்சிகளை தவிர்த்து விடுமாறும் வெளிப்படையாகப் பேசிவிடுவேன். இப்படி நான் எனது நிலைப்பாட்டைக் கூறுவதால், இயக்குநர்களும் அதுபோன்ற காட்சிகளைத் தவிர்த்து விடுகிறார்கள். இதனால் படப்பிடிப்பு தளங்களில் எனக்கும் அவர்களுக்கும் இடையே எந்தவித கருத்து மோதலும் ஏற்படுவதில்லை. எனக்கு என்று ஒரு தனிப்பட்ட எல்லையை வகுத்து வைத்திருக்கிறேன். அதை மீறாமல் தான் கடைசிவரை சினிமாவில் நடிப்பேன்'' என்று கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !