உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் 'ஓம்' இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் துவங்கியது!

தனுஷின் 'ஓம்' இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் துவங்கியது!


கர படத்தை அடுத்து தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'ஓம்'. 'அமரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார். மம்முட்டி, நசிருதீன் ஷா, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி, இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. அங்கு படப்பிடிப்பு சுமார் இரண்டு வாரங்கள் நடைபெறும் என கூறுகிறார்கள். அதன் பிறகு ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும். படப்பிடிப்பு முடிந்ததும், படக்குழுவினர் முழுமையாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் கவனம் செலுத்த உள்ளனர்.

இதற்கிடையில், தனுஷின் இந்த ஓம் படம், ரஜினிகாந்தின் 'ஜெயிலர் -2' படத்துடனான பாக்ஸ் ஆபீஸ் மோதலை தவிர்க்கும் என்று தெரியவந்துள்ளது. முதலில் இப்படம் வருகிற அக்டோபர் 16ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வேறு ஒரு தேதிக்கு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.

வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்-டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு, சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !