உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அறுவை சிகிச்சைக்குப் பின் பவன் கல்யாணை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு

அறுவை சிகிச்சைக்குப் பின் பவன் கல்யாணை சந்தித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு

நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண், மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சனிக்கிழமை அன்று தனது தோள்பட்டையில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

பவன் கல்யாணின் இரண்டு தோள்பட்டைகளிலும் கடுமையான ரோட்டேட்டர் கப் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, அவரது வலது தோள்பட்டையில் மூன்றரை மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அவர் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் மற்றும் நலமாக குணமடைந்து வருகிறார் என்று கூறப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மருத்துவமனைக்கு நேரில் சென்று பவன் கல்யாணைச் சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து விசாரித்ததுடன், அவர் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களை ஜனசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ஒரு புகைப்படத்தில், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய ஓய்வில் இருக்கும் பவன் கல்யாண், தனது வலது கையில் கட்டு போடப்பட்ட நிலையில் மருத்துவமனை படுக்கையில் அமர்ந்திருக்க, சந்திரபாபு நாயுடு அவரைச் சந்தித்துப் பேசுகிறார்.

பவன் கல்யாணின் அறுவை சிகிச்சை செய்தி வெளியானதில் இருந்து அவரது உடல்நிலை குறித்து கவலையில் இருந்த கட்சித் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும் நிம்மதியை அடைந்துள்ளனர்.

மேலும், தெலுங்கில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து கடந்த மார்ச்சில் வெளியான உஸ்தாத் பகத் சிங் என்ற படம் பாக்ஸ் ஆபீசில் அதிர்ச்சி தோல்வியாக அமைந்த நிலையில், அடுத்து சுரேந்தர் ரெட்டி இயக்கும் தனது 32 வது படத்தில் அறுவை சிகிச்சை ஓய்வுக்கு பிறகு நடிக்கப்போகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !