உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛டிரைன்' படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் : தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு

‛டிரைன்' படம் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் : தயாரிப்பாளர் தாணு அறிவிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நாசர், ஸ்ருதிஹாசன் உட்பட பலர் நடித்த டிரைன் திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த படத்திற்கு மிஷ்கினே இசையமைத்துள்ளார். அவரே திருநங்கை குறித்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். இந்த பட விழாவில் முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தயாரிப்பாளர் தாணு, ‛டிரைன்' படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் என்று அறிவித்தார்.

மிஷ்கின் பேசுகையில், ‛‛தான் இயக்கிய பிசாசு 2 படமும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை இந்த படம் தாமதமாகி உள்ளது. ஆனாலும் நான் பொறுமையாக காத்திருப்பேன். எனக்கு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன நடக்கிறது என்பது தெரியும் என்றவர், விஜய் சேதுபதியை எரிமலை என்றார். ஒரு ஆடிஷனில் அவரை நான் தேர்ந்தெடுக்கவில்லை அதனால் மனக்கசப்பு ஏற்பட்டது. ஆனால் சைக்கோ படம் பார்த்துவிட்டு அவர் பேசினார், நாங்கள் இந்த படத்தை தொடங்கினோம். ஸ்ருதிஹாசன் இதில் ஒரு பாடலை பாடி கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.

பெரியவர் கமல்ஹாசன் உடன் நடிக்க முடியவில்லை. அவரை வைத்து படம் இயக்கவில்லை, இவருடன் சேர்ந்து விட்டேன். எனக்கு பிடித்த நாசரும் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் பிடித்திருந்தால் கொண்டாடுங்கள், பிடிக்காவிட்டால் விமர்சனம் செய்யுங்கள் என்றார்.

விஜய் சேதுபதி பேசுகையில், ‛‛மிஷ்கினை நான் முதலில் சைக்கோ என்று நினைத்தேன். ஆனால் சைக்கோ படம் பார்த்துவிட்டு அவர் ரசிகர் ஆகிவிட்டேன்'' என்று கலகலப்பாக பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !