ஜானகியின் பாட்டு பாடி இசை அஞ்சலி செலுத்திய கங்கை அமரன்
ADDED : 7 hours ago
பிரபல பின்னணி பாடகியான எஸ் ஜானகி நேற்று முன்தினம் இரவு தனது 88 வயதில் உடல்நலக் குறைவால் காலமானார். 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்துள்ள அவரின் மறைவு இசை ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இசை நிகழ்ச்சிக்காக பல பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் லண்டனில் உள்ளனர். அதனால் அவர்கள் ஜானகிக்கு அஞ்சலி செலுத்த முடியவில்லை. இளையராஜா கூட அங்கு நடந்த இசை நிகழ்ச்சியில் அவருக்கு ரசிகர்கள் முன்னிலையில் மவுன அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில் கங்கை அமரனும் லண்டனில் இருந்தபடியே அவருக்கு பாடல் வாயிலாக அஞ்சலி செலுத்தினார். ஜானகி பாடிய ‛ஜானி' படத்தில் இடம்பெற்ற ‛காற்றே எந்தன் கீதம்' பாடலை கங்கை அமரன், எஸ்பிபி சரண், ஸ்வேதா மோகன், ஹரிச்சரண் மற்றும் பாடகர்கள் குழுவாக இணைந்து பாடி இசை அஞ்சலி செலுத்தினர். இந்த வீடியோ வைரலானது.