உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் படம் 5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது : என்ன விலை குறித்து கருணாஸ்

என் படம் 5 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது : என்ன விலை குறித்து கருணாஸ்

என்ன விலை படத்தில் கதை நாயகனாக நடிக்கிறார் கருணாஸ். ராமேஸ்வரம் பின்னணியில் கதை நடக்கிறது. சஜிவ் பழூர் இயக்குகிறார். இவர் மலையாளத்தில் நிமிஷா சஜயன் நடித்த தொண்டிமுதலும் திரிக்சாக்ஷியும் படத்திற்காக தேசிய விருது வாங்கினார். அவருக்கு முதல் படம் தமிழில் பண்ண வேண்டும் என்பது கனவு.

படம் குறித்து கருணாஸ் கூறுகையில் ''எனக்கு பெரிய மார்க்கெட் இல்லை. நான் இப்போது காமெடி, குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறேன். ஆனாலும், என்னை நம்பி இந்த படத்தை எடுத்தார்கள். நல்ல நேரமாக இந்த படத்தின் டிஜிட்டல், சாட்டிலைட் வியாபாரம் ஆகி 5 கோடி ரூபாய் வந்துள்ளது. இந்த மாதம் படத்தை வெளியிடலாம் என நினைத்தோம். ஜனநாயகன் ரிலீசுக்காக வெயிட்டிங். நான் காமெடியனாக வந்தேன். அடுத்து கதைநாயனாக பல படங்களில் நடித்தேன். தேசிய விருது வாங்க ஆசைப்பட்டேன். பல படங்களை தயாரித்தேன், வினியோகம் செய்தேன். நிறைய இழந்தேன். அடுத்து அரசியலுக்கு போய் ஏழு ஆண்டுகள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தேன். பின்னர் மீண்டும் வந்தேன்.

நல்ல படங்கள் கிடைத்தது, குணசித்திர வேடங்களில் நடித்தேன். அதில் போகும் இடம் வெகுதுாரமில்லை நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. இப்போது வந்துள்ள கட்டா குஸ்தி 2வில் என் காமெடிக்கு மக்கள் சிரிக்கிறார்கள். எனக்கே சந்தோஷமாக இருக்கிறது. ஒரு மலையாள டீமுடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பது என் பல ஆண்டு கனவு. இப்போது இந்த படத்தில் மீண்டும் நல்ல அழுத்தமான ரோல். படத்தின் இயக்குனர் தேசிய விருது பெற்ற கதாசிரியர் என்பதால் நிறைய ஆராய்ச்சி செய்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார். கண்டிப்பாக படம் பேசப்படும்'' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !