உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பவி டீச்சருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

பவி டீச்சருக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

ஆஹா கல்யாணம் என்ற வெப்சீரியலில் பவி டீச்சர் என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் பிரிகிடா சாகா. அதையடுத்து மாஸ்டர், இரவின் நிழல், கருடன் என பல படங்களில் நடித்தார். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது காதலர் ஆனந்தை சோசியல் மீடியாவில் அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் பிரிகிடா. ஆனந்த், ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசைய முறுக்கு படத்தில் நடித்தவர். இந்நிலையில் பிரிகிடா சாகாவுக்கும், ஆனந்துக்கு இரு வீட்டார் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது.

இது குறித்த புகைப்படங்களை தனது இணைப்பக்கத்தில் பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியான பதிவு போட்டு உள்ளார் பிரிகிடா. அந்த பதிவில், எங்கள் இருவரது குடும்பத்தினரின் ஆசியுடன், இருவரது கலாச்சார முறைப்படி எங்கள் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணம் என்ற புதிய வாழ்க்கை பயணத்தில் இணையப் போகிறோம். எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் அனுப்பிய வாழ்த்துக்களை படித்து உங்கள் தூய்மையான அன்பை உணர்ந்தோம். இதற்காக நாங்கள் மிகவும் நன்றியுடன் இருப்போம். உங்களது அன்பான ஆசியுடன் எங்களது வாழ்நாள் பந்தம் இனிதே தொடங்க உள்ளது என்று பதிவிட்டுள்ளார் பிரிகிடா சாகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !