உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜி.டி.என் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜி.டி.என் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் மாதவன் கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கிய இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் 'ஜி.டி. நாயுடு' வாழ்க்கை வரலாற்றில் நடித்து வருகிறார். இப்படத்தை கிருஷ்ண குமார் ராமகுமார் இயக்கியுள்ளார். மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், தம்பி ராமையா,வினய் ராய், பிரியாமணி, யோகி பாபு, துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் . கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

முதலில் ஜி.டி.என் படம் நேற்று ஜூலை 17ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்திருந்தனர். ஆனால், திடீரென முதல்வர் விஜய்யின் 'ஜனநாயகன்' படம் வருகின்ற ஜூலை 23ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்தனர்.

இதனால் ஜி.டி. நாயுடு ( ஜி.டி.என்) படம் சற்று தள்ளி ஆகஸ்ட் 7ந் தேதியன்று திரைக்கு வருகிறது என புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர். மேலும், ஜி.டி. நாயுடு படத்திற்கு தணிக்கை 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படம் 2 மணி 27 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !