உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏழு மாத கர்ப்பத்திலும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்த தீபிகா படுகோனே

ஏழு மாத கர்ப்பத்திலும் ஆக்ஷன் காட்சிகளில் நடித்த தீபிகா படுகோனே

பாலிவுட் நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதியினருக்கு கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பரில் முதல் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு துவா படுகோனே சிங் என்று பெயரிட்டுள்ளனர். அதையடுத்து இந்த ஆண்டு ஏப்ரலில் மகள் துவாவுடன் கூடிய புகைப்படத்தைப் பகிர்ந்து, தாங்கள் இரண்டாவது குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் மகிழ்ச்சியுடன் அறிவித்தனர். தற்போது தீபிகா படுகோனே கர்ப்பமாக இருந்தபோதும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ராக்கா படத்திற்கான படப்பிடிப்பில் தொடர்ந்து பிஸியாக ஈடுபட்டு வருகிறார்.

ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் தீபிகா படுகோனே, இப்படத்தில் இடம்பெறும் பல கடினமான ஆக்ஷன் காட்சிகளில் வெற்றிகரமாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு பாதியளவு முடிந்திருந்த போதே தீபிகா தனது இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்தார். இதனால் அவரது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்படலாம் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். தனது பிரசவகால விடுமுறைக்கு செல்லும் முன்பாக, தன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் முடித்துக் கொடுப்பதில் அவர் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !