உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அப்பா வேடத்திற்கு அதிகமாக கூப்பிடுகிறார்கள்: அர்ஜூன் தாஸ்

அப்பா வேடத்திற்கு அதிகமாக கூப்பிடுகிறார்கள்: அர்ஜூன் தாஸ்


பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” படம் சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கி இருந்தார். அர்ஜூன் தாஸ், அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் அர்ஜூன்தாஸ் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்திருந்தார்.

இதுகுறித்து படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வில் அர்ஜூன்தாஸ் கூறும்போது “படம் வெளியான பிறகு பல திரையரங்குகளுக்கு சென்றோம். அங்கு குடும்ப ரசிகர்கள், குழந்தைகள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை ரசித்த விதம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. கதை சொல்லும்போதே இந்தப் படத்தில் ஒரு கனவு நடிகர் பட்டாளம் இருக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். அது நிஜமாகியிருக்கிறது. இவ்வளவு மூத்த மற்றும் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. அவர்களுடன் என் பெயரும் ஒரே போஸ்டரில் இடம்பெற்றதே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன்.

இந்தப் படத்தில் முதல் முறையாக நான் ஒரு சிறுவனுக்கு அப்பாவாக நடித்தேன். படப்பிடிப்பின் முதல் நாளிலேயே என்னை “அப்பா” என்று அழைத்தபோது ஒரு புதிய உணர்வு ஏற்பட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு எல்லோரும் என்னை “அப்பா” கதாபாத்திரத்திற்கே அதிகம் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !