உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் படத்திற்கு எதிர்மறை பிரசாரம் ; பிரபல நடிகர் மீது நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குற்றச்சாட்டு

என் படத்திற்கு எதிர்மறை பிரசாரம் ; பிரபல நடிகர் மீது நடிகர் ஜோஜூ ஜார்ஜ் குற்றச்சாட்டு


மலையாளத்தில் துணை நடிகராகத் தொடங்கி, குணச்சித்திர நடிகர், வில்லன் என மாறி தற்போது கதையின் நாயகனாக நடித்து வருபவர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். தமிழில் 'ஜெகமே தந்திரம், தக் லைப்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், மலையாளத்தில் ஹிட்டான 'ஜோசப்' மற்றும் 'பணி' படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். இந்த வாரம் இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் இவர் நடித்த 'வரவு' திரைப்படம் வெளியானது. பழிவாங்கும் கதை அம்சத்துடன் பழைய பார்முலாவில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதே சமயம், தனது படத்திற்கு எதிராக தொடர்ந்து சோசியல் மீடியாவில் எதிர்ப்பு பிரசாரத்தை பிரபல நடிகர் ஒருவரும் அவரது மனைவியும் தொடர்ந்து செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்.

ஆனால் அவர்களுடைய பெயரை குறிப்பிடாமல் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள அவர், தனது தனிப்பட்ட பிம்பத்திற்கும் தனது புதிய படத்தின் வரவேற்புக்கும் திட்டமிட்டு சேதம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள் என்றும், மலையாள திரை உலகில் இது போன்ற விஷயம் தற்போது பொதுவானதாக மாறிவிட்டதாகவும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்கள் யார் அந்த நட்சத்திர தம்பதி என ஆளாளுக்கு ஆருடம் கூறி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !