உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆசிரியர் தினத்தில் '3 இடியட்ஸ்' ரீரிலீஸா ? தயாரிப்பாளர் மறுப்பு

ஆசிரியர் தினத்தில் '3 இடியட்ஸ்' ரீரிலீஸா ? தயாரிப்பாளர் மறுப்பு


பாலிவுட்டில் கடந்த 2009ல் ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் அமீர்கான், மாதவன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் '3 இடியட்ஸ்'. மாணவர்களின் கல்லூரி பருவமும், பின்னர் அவர்களின் எதிர்காலமும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகி இருந்தது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்த படம், பின்னர் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 'நண்பன்' என ரீமேக் ஆனது.

இந்த படத்தை தயாரித்த விது வினோத் சோப்ரா பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 3 இடியட்ஸ் உட்பட பல படங்களின் உரிமையை என்.எச். ஸ்டுடியோஸ் வாங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் நான்காம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மீண்டும் 3 இடியட்ஸ் படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக இருக்கிறது என்று சில தகவல்கள் சோசியல் மீடியாவில் பரவின.

ஆனால், இந்த தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்று கூறியுள்ள விது வினோத் சோப்ரா பிலிம்ஸ் நிறுவனம், தங்களது அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டால் மட்டுமே அது உண்மை, மற்றபடி வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், பரப்பவும் வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !