ஜனநாயகன் படத்தில் நடித்த அமைச்சர்கள் யார் தெரியுமா?
வினோத் இயக்கத்தில் தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தில் 4 அமைச்சர்கள் நடித்து இருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அமைச்சர் புஸ்சி ஆனந்த் கிளைமாக்ஸ்சுக்கு முந்தைய ஒரு காட்சியை ஒரு வழிபாட்டுதலத்தை பாதுகாக்கும் இந்துவாக, மாறுபட்ட கெட் அப்பில் நடித்து இருக்கிறார்.
விஜய்க்கு உதவும் முஸ்லிம் வேடத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் வருகிறார். ஒரு பாடல் காட்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் வந்து போகிறார். கிளைமாக்சில் அமைச்சரவை கூட்டம் சம்பந்தப்பட்ட ஒரு சீனில் சின்ன வேடத்தில் போக்குவரத் துறை அமைச்சர் பார்த்திபனும் நடித்து இருக்கிறார்கள். இவர்களின் ஸ்ரீநாத்துக்கு மட்டுமே கொஞ்சம் பேசப்படுகிற மாதிரியான வெயிட்டான கேரக்டர்.
இவர்களை தவிர, படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணாவும் ஒரு பாடலில் கவுரவ வேடத்தில் வந்து ஆடுகிறார். இசையமைப்பாளர் அனிருத்தும் தளபதி கச்சேரி பாடலை பாடி ஆடியிருக்கிறார். இவர்களை தவிர படத்தில் நாசர், ரேவதி உள்ளிட்டோர் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்கள்.
நரேனுக்கும் முக்கியமான வேடம். தெலுங்கு படமான பகவந்த் கேசரியில் விஜய் கேரக்டரில் பாலகிருஷ்ணாவும், மமிதா பைஜூ கேரக்டரில் ஸ்ரீலீலாவும், பூஜா ஹெக்டே கேரக்டரில் காஜல் அகர்வாலும் நடித்து இருந்தனர். தமிழில் கவுதம் மேனன் கேரக்டரில் தெலுங்கில் சரத்குமார், வில்லன் பாபி தியோல் கேரக்டரில் அர்ஜூன் ராம்பாலும் நடித்து இருந்தனர். அங்கே தமன் இசையமைத்து இருந்தார். அனில் ரவிபுடி இயக்கியிருந்தார்.