உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் - இன்றுடன் 200 கோடி வசூலைக் கடக்குமா?

ஜனநாயகன் - இன்றுடன் 200 கோடி வசூலைக் கடக்குமா?


முதல்வர் விஜய்யின் கடைசி படமாக இரண்டு தினங்களுக்கு முன்பு ஜூலை 23ம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளிவந்தது. எதிர்பார்த்ததை விட இந்தப் படம் வசூலைத் தரவில்லை என்று பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

இணையங்களில் திருட்டுத்தனமாக வெளியீடு, படத்தின் தாமதமான வெளியீடு, ஏ சான்றிதழ், ஆகியவை இந்தப் படத்தின் வசூலை பாதிக்கும் விஷயங்களாக உள்ளது என்கிறார்கள்.

முதல் நாள் வசூலாக சுமார் 80 கோடி வசூலித்தது என்று தகவல் வெளியானது. அதற்கடுத்த இரண்டு நாட்களில் மேலும் 80 கோடியை வசூலித்து 160 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள்.

இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் முன்பதிவு செய்தவர்களும் செய்யாதவர்களும் படத்தைப் பார்க்க நிச்சயம் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இன்றைய வசூலையும் சேர்த்தால் எப்படியும் 200 கோடியைக் கடந்துவிடும் என்பது தகவலாக உள்ளது.

படத்தின் தயாரிப்பு நிறுவனம் இதுவரையில் அதிகாரப்பூர்வ வசூல் விவரங்களை வெளியிடவில்லை. முந்தைய விஜய் படங்களின் முதல் நாள் வசூலை விட இந்த 'ஜனநாயகன்' படத்தின் முதல் நாள் வசூல் குறைவு என்பதால் அறிவிப்பு வெளியிடாமல் இருந்திருக்கலாம்.

ஒரு வேளை 200 கோடி வசூல் கடந்த பிறகு அறிவிப்பு வருமா என்பது நாளை தெரிய வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !