உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுவாஸ்யமான சூப்பர் தகவல்கள்: தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்

சுவாஸ்யமான சூப்பர் தகவல்கள்: தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷல்


*நடிகர் தனுஷ் இன்று 43வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். இயக்குனர் கஸ்துாரிராஜா, விஜயலட்சுமி தம்பதியினரின் இளைய மகன் தனுஷ். இவர் அண்ணன் செல்வராகவன் இன்ஜினியரிங் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தார். அக்கா விமலகீதா, கார்த்திகா இருவருமே டாக்டர்கள்.

* தனுஷ் அப்பா கஸ்தூரிராஜாவின் நிஜப்பெயர் கிருஷ்ணமூர்த்தி, தனுசின் நிஜப்பெயர் வெங்கடேச பிரபு. இயக்குனர் விசுவிடம் உதவியாளராக பல ஆண்டுகள் இருந்தவர் கஸ்துாரிராஜா.

* எம்ஜிருக்கும் தனுசுக்கும் மறைமுக தொடர்பு உண்டு. ஆம், சென்னையில் எம்ஜிஆர் குடும்பம் நடத்திய தாய் சத்யா பள்ளியில்தான் அவர் படித்தார். துள்ளுவதோ இளமை படத்துக்காக படிப்பை பாதியில் விட்டார். அவர் படித்த பள்ளியிலேயே அவர் படத்தில் படப்பிடிப்பும் பிற்காலத்தில் நடந்து இருக்கிறது.

* துள்ளவதோ இளமை படத்தை கஸ்துாரிராஜா இயக்கினார் என்று சொல்லப்பட்டாலும், செல்வராகவனே இயக்குனர் என்பார்கள். அதில் வரும் விஜயகுமார் கேரக்டரில் முதலில் நடித்தவர் விசு. அதேபோல், புதுப்பேட்டை படத்தில் முதலில் ஒரு கேரக்டரில் நடித்துவிட்டு பின்னர் விலகியவர் கஸ்துாரிராஜா.

* தனுசுடன் அதிகம் பணியாற்றியவர் வேல்ராஜ். இவர் விஐபி, தங்கமகன் என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். 11 படங்களில் ஔிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்.

* தனுசை வைத்து உத்தமபுத்திரன், யாரடிநீமோகினி, திருச்சிற்றம்பலம் படங்களை இயக்கியவர் ஜவஹர் மித்ரன். பொல்லாதவன் , ஆடுகளம் , வடசென்னை அசுரன் (2019) ஆகிய 4 படங்களை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். காதல் கொண்டேன் புதுப்பேட்டை மயக்கம் என்ன, நானே வருவேன் ) ஆகிய 4 படங்களை இயக்கியுள்ளார்.

* கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஒரு படத்தின் பூஜை போடப்பட்டது. பின்னர் ஏனோ அது வரவில்லை. பிற்காலத்தில் தனுஷ் படங்களில் அப்பாவாக நடித்தார் கே.எஸ்.ரவிக்குமார். அதேபோல் விஐபி படத்தில் சமுத்திரக்கனியும், இட்லிக்கடை படத்தில் ராஜ்கிரணும் அப்பாவாக நடித்து இருக்கிறார்கள்.

* சின்ன வயதில் இருந்தே தனுசுக்கு கடவுள் பக்தி அதிகம். அடிக்கடி தேனியில் இருக்கும் தனது குல தெய்வம் கோயிலுக்கு போவார். இப்போது சிவனை அதிகம் வழிபடுகிறார்.

* தனுசின் நட்பு வட்டாரங்கள் மிகக்குறைவு. அனிருத், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் நல்ல நண்பர்கள். இப்போது அனிருத் விலகிவிட்டார்.

* ஆரம்பத்தில் பென்ஸ் வைத்து இருந்தார். அடுத்து ரோல்ஸ்ராய்ஸ்வாங்கினார். அந்த கார் வந்தநேரம் அவருக்கு படங்கள் ஓடவில்லை. அதனால், அதை சென்டிமென்டாக பயன்படுத்துவதை தவிர்த்தார். தனுஷ் சைவ பிரியர்.

* சினிமா விழாக்களுக்கு வேட்டிக்கட்டிகொண்டு, கருங்காலி மாலை அணிந்து வருவது அவர் ஸ்டைல். விழாவில் பேசும்முன்பு பலமணி நேரம் அறையில் கேரவனில் ரிகர்சல் பார்ப்பார்.

* பல ஆண்டுகளாக அவர் டீமில் மானேஜர் ஷ்ரேயாஸ், காஸ்ட்யமர் காவ்யா. ரசிகர் மன்ற செயலாளர் ராஜா ஆகியோர் உடன் இருக்கிறார்கள்.

* சென்னையில் சாலிகிராமம், நந்தம்பாக்கம், ராஜாஅண்ணாமலைபுரம் உட்பட பல இடங்களில் வசித்து வந்தார் தனுஷ். இப்போது போயஸ்கார்டனில் வசிக்கிறார். அங்கே வீடு கட்டி செல்ல வேண்டும் என்பது அவர் கனவு.

* முன்பெல்லாம் பேட்டி கொடுத்து வந்தார். அவரை பற்றி சர்ச்சைகள் அதிகம் ஆன நிலையில் மீடியாவுடன் பே சுவதை பேட்டி கொடுப்பதை தவிர்த்துவிட்டார்.

* இந்தி தெரியாமல் இந்தி படம் பண்ணினார். பின்னர் கற்றுக்கொண்டார். ஓரளவு தெலுங்கு தெரியும். ஆங்கிலம் முன்பை விட நன்றாக கற்றுக்கொண்டார்.

* எந்த நடிகருடனும் போட்டி இல்லை என்பார். ஒரு கட்டத்தில் அவருக்கும் சிம்புக்கும் போட்டி இருந்தது. இப்போது நண்பர்கள் ஆகிவிட்டார்கள். பல ஆண்டுகளாக எடையை கட்டுக்குள் வைத்து இருக்கிறார்.

* தனது சகோதரி மகன் பவிசை 'நீக்' படத்தில் ஹீரோ ஆக்கிவிட்டார். இப்போது மகன் யாத்ராவை ஹீரோ ஆக்கப்போகிறார். அதற்கான வேலைகளில் இருக்கிறார். சமீபகாலமாக அரசியலிலும் ஆர்வம் காண்பிக்கிறார்.

* இப்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'ஓம்' படத்தில் நடித்து வருகிறார். அடுத்து 'லப்பர் பந்து' தமிழரசன் பச்சமுத்து படத்திலும், அதற்கடுத்து மாரிசெல்வராஜ், வெற்றி மாறன் படத்திலும் நடிக்க இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !