உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவிதேஜா, பிரியா பவானி சங்கர் நடித்த 'இருமுடி கட்டு' ஆக.,21ல் ரிலீஸ்

ரவிதேஜா, பிரியா பவானி சங்கர் நடித்த 'இருமுடி கட்டு' ஆக.,21ல் ரிலீஸ்


தெலுங்கில் நின்னு கோரி, மஜிலி, குஷி போன்ற காதல் கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர் சிவா நிர்வாணா. இவரின் அடுத்த படமான இருமுடி கட்டு படத்தில் கதாநாயகனாக ரவி தேஜா நடித்துள்ளார். நாயகியாக பிரியா பவானி சங்கர், 'காவேரி' எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சுவாமி ஐயப்பனின் மகிமையை சொல்லும் வகையில் உருவாகியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ரவி தேஜா, தனது வழக்கமான மாஸ் அவதாரத்தை விட்டு விலகி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மகளை உயிராக நேசிக்கும் அன்பான அப்பா, கோபம் நிறைந்த மனிதர், தனது மகளின் வேண்டுகோளுக்கிணங்க மது பழக்கத்தை கைவிட்டு பகவான் ஐயப்பனின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் ஆன்மிக மனிதர் என மூன்று விதமான பரிமாணங்களில் நடிக்கிறார்.

ஜிவி பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 21ம் தேதி ரிலீசாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !