தமிழில் ஹீரோயின் ஆன மலையாள இன்புளூயன்சர்
ADDED : 5 hours ago
மூவி டோர்ன் புரொடக்ஷன் சார்பில் சாய் வினோத் ஜெயக்குமார் தயரிக்கும் படம் “குட் நியூஸ்”. ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கிறார்கள். பாண்டிராஜ் இந்த பட்ததிற்கு வசனம் எழுதியுள்ளார். கதாநாயகியாக கல்யாணி அனில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் ஆஷா சரத், முத்துக்குமார், ஜாபர், குரேஷி, தீபா, வினோதினி, திவ்யா, மணிமேகலை, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரவீன்குமார் ஒளிப்பதிவாளராகவும், சித்துகுமார் இசையமைப்பாளராகவும், பணியாற்றி உள்ளனர்.
இந்த படத்தில் அறிமுகமாகும் கல்யாணி அனில், மலையாள சோஷியல் மீடியா பிரபலம். இன்புளூயன்சராகவும் பிரபலமானர். சமீப காலமாக மலையாள மியூசிக் ஆல்பங்களில் ஆடி வருகிறார். பல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் இருக்கிறார். 'குட் நியூஸ்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.