உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜனநாயகன் : தமிழகத்தில் 100 கோடி, உலக அளவில் 250 கோடி வசூல்

ஜனநாயகன் : தமிழகத்தில் 100 கோடி, உலக அளவில் 250 கோடி வசூல்

முதல்வராகப் பொறுப்பேற்ற பின் முதல் மற்றும் கடைசி படம், நடிகராகக் கடைசி படம் என விஜய்யின் 'ஜனநாயகன்' படம் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த வாரம் ஜூலை 23ம் தேதி வெளியானது. இன்றுடன் ஒரு வாரத்தை நிறைவு செய்து இரண்டாவது வாரத்தில் நுழைந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இப்படம் 250 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 100 கோடி, வெளிநாடுகளில் 80 கோடி இந்தியாவில் இதர மாநிலங்களில் 70 கோடி என வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்படத்தின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும் போது இந்த வசூல் போதாது. மேலும் இப்படம் 200 கோடிக்கு சற்று கூடுதலாக வியாபாரம் நடந்துள்ளது. மொத்தமாக 400 கோடி வசூலைக் கடந்தால்தான் படத்திற்கு லாபம் கிடைக்கும் என்கிறார்கள். இதுவரையில் 110 கோடி பங்குத் தொகை வந்துள்ளதாகவும் இன்னும் 90 கோடி வர வேண்டும் என்றும் சொல்கிறார்கள். அந்த 90 கோடி பங்கிற்கு படம் மேலும் 200 கோடியை வசூலிக்க வேண்டும்.

இப்படத்தைப் பற்றி முதல் நாளில் மட்டும் தியேட்டர்களுக்குச் சென்று அழுது கொண்டே படம் பார்த்து ரீல்ஸ்களைப் பதிவிட்டார்கள் அமைச்சர்கள். தனது கடைசி படம் பற்றி, படம் வெளியான பின்பு நடிகர் விஜய் என்கிற சமூக வலைத்தள கணக்கில், எந்த ஒரு பதிவையும் பதிவிடவில்லை. வெளியீட்டிற்கு முன்பாக ஒரே ஒரு முறை படத்தைப் பார்த்த செய்தி மற்றும் வெளிவந்தது.

முதல்வர் விஜய் கட்சியான தவெக தொண்டர்கள் முதல் நாளுடன் படத்தின் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டார்கள். நடிகர் விஜய் ரசிகர்களும் இந்தப் படத்திற்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து பதிவுகளைப் போடவில்லை.

குறிப்பு - வசூல் நிலவரங்கள் பற்றி தயாரிப்பாளர்கள் சொல்வதுதான் ஆதாரப்பூர்வமானது. இங்கே குறிப்பிட்டுள்ள வசூல் நிலவரங்கள் சினிமா வட்டாரங்களில் பரவிய தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !