உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாழ்க்கை தத்துவம் பகிர்ந்த சமந்தா

வாழ்க்கை தத்துவம் பகிர்ந்த சமந்தா


கடந்த 2023ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‛குஷி' என்ற படத்தில் நடித்த சமந்தா, அதன்பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கதையின் நாயகியாக ‛மா இன்டி பங்காரம்' என்ற படத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இப்படம் வெளியானது. நந்தினி ரெட்டி இயக்கிய இந்த படம் 100 கோடி வசூல் சாதனை செய்தது. இப்படம் வெளியான போதே சமந்தா கர்ப்பமாக இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவின்போது தான் கர்ப்பமாக இருப்பதை சமந்தாவும் உறுதிப்படுத்தி இருந்தார்.

அதோடு, குழந்தை பிறக்கும் காலகட்டம் வரை தான் சில ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற அல்தெரபி பிரைம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் சமந்தா. அந்த மேடையில் தங்க நிறத்தில் ஆடை அணிந்து ஜொலி ஜொலித்தார் சமந்தா. அப்போது சமந்தாவின் பேபி பம்ப் நன்றாக தெரிந்தது. இது குறித்து வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியானதை அடுத்து தாய்மை அடைந்துள்ள சமந்தா, முன்பை விட இப்போது இன்னும் அழகாக இருக்கிறார் என்று கமெண்ட் கொடுத்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இன்ஸ்டா பதிவு

இந்த நிலையில் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில், ‛‛எல்லாக் காலமும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில காலங்கள் நம்மை காத்திருக்கச் சொல்கின்றன. சில போராடச் சொல்கின்றன; சில அனைத்தையும் விட்டுவிட்டு கடந்து போகச் சொல்கின்றன. எந்தக் காலம் நமக்கு அமைந்தாலும் அதை மாற்ற நம்மால் முடியாது. அதை எப்படி எதிர்கொண்டு வாழ்கிறோம் என்பதில் தான் வாழ்க்கையே உள்ளது'' எனப் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !