உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விமான நிலைய புகைப்படக் கலைஞர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய கஜோல்

விமான நிலைய புகைப்படக் கலைஞர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய கஜோல்


பாலிவுட் நடிகை கஜோல் தமிழில் 'மின்சார கனவு' படத்தில் நடித்ததன் மூலம் இங்குள்ள ரசிகர்களிடமும் பிரபலமானவர். நடிகர் அஜய் தேவ்கனை காதல் திருமணம் செய்துகொண்து குடும்ப வாழ்க்கையில் செட்டிலான இவர், நேற்று தனது 52வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியூர் பயணம் மேற்கொள்வதற்காக நேற்று இரவு மும்பை விமான நிலையம் வந்தார். அப்போது அவருக்காக அங்கே விமான நிலைய புகைப்பட கலைஞர்கள் பிறந்தநாள் கேக் உடன் தயாராக இருந்தனர்.

அவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக கையசைத்து, அவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கேக்கை வெட்டிக் கொண்டாடி மகிழ்ந்தார் கஜோல். அந்த புகைப்படக் கலைஞர்களும் அவருக்கு பிறந்தநாள் பாடலைப் பாடி வாழ்த்து தெரிவித்தனர். கஜோலுடன் வந்த மகள் நைஷா தேவ்கன், புகைப்படக் கலைஞர்களின் கேமராக்களுக்குப் பயந்து சற்று தூரத்திலேயே ஒதுங்கி நின்று கொண்டார்.

விமான நிலையத்துக்கு சினிமா பிரபலங்கள் வரும்போது சிலர் இது போன்ற புகைப்படக்காரர்களைக் கண்டும் காணாமல் செல்வதும், வேண்டாவெறுப்பாகப் புகைப்படம் எடுத்துக்கொள்வது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடக்கும் நிலையில், இப்படி அவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுடன் நடிகை கஜோல் பிறந்தநாள் கொண்டாடியது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !