உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நூறு சாமி முதல் இதயம் முரளி வரை': இந்த வார ஓடிடி ரிலீஸ்...!

'நூறு சாமி முதல் இதயம் முரளி வரை': இந்த வார ஓடிடி ரிலீஸ்...!

ஒவ்வொரு வாரமும் புதுப்படங்கள் தியேட்டரில் வெளியாவது போன்று ஓடிடியிலும் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அந்தவகையில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம்....

நூறு சாமி

சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, சுவாசிகா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'நூறு சாமி'. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த படம் நாளை (ஆக.7ம் தேதி) ஜீ5-ல் வெளியாகவுள்ளது.

இதயம் முரளி

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் ' இதயம் முரளி'. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம் நாளை (ஆக.7ம் தேதி) நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.

வதந்தி சீசன்-2

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், சசிகுமார், அபர்ணா தாஸ், ரேவதி சர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவரவுள்ள வெப் தொடர் 'வதந்தி சீசன்-2'. இந்த தொடர் நாளை ( ஆக.7ம் தேதி) அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

லெனின்

தெலுங்கு இயக்குநர் முரளி கிஷோர் அப்பூரு இயக்கத்தில், அகில் அக்கினேனி மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' லெனின்'. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற இந்த படம் நாளை (ஆக.7ம் தேதி) ஜீ5-ல் வெளியாகவுள்ளது.

உயிர்

மலையாள இயக்குநர் எம்.பத்ம குமார் இயக்கத்தில், ரோஷன் மேத்யூ, பைஜு சந்தோஷ், அதுல்யா சந்திரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள க்ரைம் திரில்லர் திரைப்படம் ' உயிர்'. இந்த படம் ஆக.4ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

கட்டாளன்

மலையாள இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், சுனில், துஷாரா விஜயன், கபீர் துஹான் சிங் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ' கட்டாளன் (Kattalan)'. த்ரில்லர் திரைக்கதை கொண்ட இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாளை (ஆக.7ம் தேதி) மனோரமா மேக்ஸில் வெளியாகவுள்ளது.

டார்க் ஜெயண்ட்

கே.எஸ். கிஷன் இயக்கத்தில், நடிகை சோனியா அகர்வால், கே. பாக்கியராஜ், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'டார்க் ஜெயண்ட் (Dark Giant)'. இந்த படம் ஆஹா தளத்தில் வெளியாகியுள்ளது.

சத்யத்தில் சம்பவிச்சது

மலையாள இயக்குநர் பிரசாந்த் மோகன் இயக்கத்தில், காஷ் மேனன் மற்றும் தில்ஷானா தின்ஷாத், திலீஷ் போத்தன், ஜானி ஆண்டனி மற்றும் ஸ்ரீகாந்த் முரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'சத்யத்தில் சம்பவிச்சது (sathyathil sambhavichathu)'. இந்த படம் நாளை ( ஆக.7ம் தேதி) சன் நெக்ஸ்ட்டில் வெளியாகவுள்ளது.

மைன் வாப்பஸ் ஆவுங்கா

பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்கத்தில், தில்ஜி தோசாஞ், நசிருதீன் ஷா, வேதாங் ரைனா, சர்வாரி வாக் ஆகியோர் நடித்துள்ள படம் ' மைன் வாப்பஸ் ஆவுங்கா'. இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நாளை (ஆக.7ம் தேதி) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !