உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : 29 லட்சத்தில் எடுக்கப்பட்ட 'புரியாத புதிர்'

பிளாஷ்பேக் : 29 லட்சத்தில் எடுக்கப்பட்ட 'புரியாத புதிர்'

திரைப்பட விநியோகத்தில் ஈடுபட்டிருந்த கே.எஸ்.ரவிகுமார், பின்னர் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். விக்ரமன் அறிமுகப் படமான 'புது வசந்தம்' படத்திலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அந்தப் படத்தைத் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஆர்.பி.சவுத்ரி, 'தர்க்கா' என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக் கூறிமையை வாங்கி வைத்திருந்தார். அந்தப் படத்திற்கான திரைக்கதை எழுதும் பொறுப்பை ரவிகுமாரிடம் ஒப்படைத்தார்.

திரைக்கதையை படித்த சவுத்ரி 'படத்தையும் நீங்களே இயக்கி விடுங்கள்' என்று ரவிக்குமாரிடம் கூறிவிட்டார். முதலில் தயங்கிய ரவிக்குமார் பிறகு ஒப்புக்கொண்டார். ஆனால் தயாரிப்பாளர் சவுத்ரி, கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஒரு நிபந்தனை விதித்தார். 'படத்திற்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் 30 நாளில் படத்தை முடிக்க வேண்டும் அதாவது 30 லட்சத்திற்குள் படத்தை முடிக்க வேண்டும்' என்றார்.

இதனை சவாலாக ஏற்றுக்கொண்ட கே.எஸ். ரவிக்குமார் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி 29 நாட்களில் 29 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் படத்தை முடித்துக் கொடுத்தார். அன்று முதலே கேஎஸ் ரவிக்குமார் 'தயாரிப்பாளர்களின் இயக்குனர்' என்ற பெயரை பெற்றார்.

தொடர்ந்து ஆர்.பி. சவுத்ரி தயாரிப்பில் பல படங்களை இயக்கினார். 'புரியாத புதிர்' படமும் 100 நாட்களுக்கு மேல் ஓடி தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !