மோகன்லால் மகள் படம் மூலம் 25 வருடங்களுக்குப் பிறகு சினிமாவுக்கு திரும்பிய நடிகை சிப்பி
மோகன்லாலின் மகள் விஸ்மயா மோகன்லால் தற்போது வெளியாகி உள்ள 'தொடக்கம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ள இப்படம் முதல் நாளே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் விஸ்மயாவின் தாயாக நடிகை சிப்பி ரஞ்சித் என்பவர் நடித்துள்ளார். இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த 'தர்மா' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர். மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'ஸ்படிகம்' மற்றும் மம்முட்டி நடித்த 'ஹிட்லர்' ஆகிய படங்களில் அவர்களுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
கடந்த 2000ல் வெளியான 'காட்டுவண்டு விளிச்சப்போல்' என்கிற படத்தில் நடித்த இவர், அதன் பிறகு படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இந்த நிலையில் 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது 'தொடக்கம்' படத்தின் மூலம் சினிமாவில் மீண்டும் மறுபிரவேசம் செய்துள்ளார் சிப்பி. இனிவரும் நாட்களில் இந்த வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டு பயணிப்பாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.