உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்காவில் மட்டும் 2,000 தியேட்டர்களில் வெளியாகும் டாக்சிக்

அமெரிக்காவில் மட்டும் 2,000 தியேட்டர்களில் வெளியாகும் டாக்சிக்

யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்சிக் படம் அமெரிக்காவில் பிரமாண்டமான முறையில் வெளியாவதற்கு தயாராகி வருகிறது. கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அமெரிக்கா முழுவதும் 2,000 திரையரங்குகளில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அப்படத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் அறிவித்துள்ளார். கடந்த காலங்களில் இந்திய படங்கள் அங்கு அதிக நாட்கள் ஓடிய தியேட்டர்கள் கைப்பற்றப்பட்டு வருகிறதாம்.

அதனால், அமெரிக்காவில் மிக அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் திரையிடப்படும் இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக டாக்சிக் அமையவுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 26ம் தேதி அன்று கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது. யஷ் உடன் இணைந்து கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுடாரியா, ருக்மிணி வசந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரவி பஸ்ரூர் உட்பட பல இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !