உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பிரேம் நசீரை தெரியும், பாலச்சந்திரனை தெரியுமா?

பிளாஷ்பேக்: பிரேம் நசீரை தெரியும், பாலச்சந்திரனை தெரியுமா?

மலையாள சினிமாவின் கருப்பு வெள்ளை கால சூப்பர் ஸ்டார் பிரேம் நசீரை அனைவரும் அறிவார்கள். 650 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர், ஷீலாவுடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் இப்படி நிறைய தெரியும். ஆரம்ப காலகட்டங்களில் மலையாளத்திற்கு நிகராக தமிழ் படங்களிலும் நடித்து வந்தார். ஆனால் இதே காலகட்டத்தில் இவருக்கு போட்டியாக வந்து தமிழ் படங்களில் நடித்த டி.கே.பாலச்சந்திரன் பற்றி அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மலையாள சினிமாவில் முதன் முதலாக 200 படங்களில் நடித்து முடித்தவர் டி.கே.பாலச்சந்திரன். நடிப்பதோடு மட்டுமல்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். 20 படங்கள் வரை தயாரித்துள்ளார். தமிழில் ஜாதகம், அந்த நாள், நாடோடி மன்னன், காலம் மாறிப்போச்சு, பாண்டித்தேவன், தெய்வத்தின் தெய்வம், குலவிளக்கு, நீதி, மாடப்புறா, யார் மணமகன், கற்பூரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாள சினிமாவில் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடித்தவர் இவர் தான்.

தனது 13வது வயதில் குழந்தை நட்சத்திரமாக 'பிரகலாதா'வில் நடித்தார். பின்னர் தமிழ்நாட்டிற்கு வந்து நவாப் ராஜமாணிக்கம் நாடகக் கம்பெனியான “பாய்ஸ் நாடக கம்பெனி”யில் சேர்ந்தார். இங்கு தனது நடிப்பாற்றலை வளர்த்துக் கொண்டார். புற்று நோயால் பாதிக்கப்பட்ட பாலச்சந்திரன் தனது 78-ஆவது வயதில் திருவனந்தபுரத்தில் 2005ம் ஆண்டு காலமானார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !