உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூனியர் என்டிஆருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை

ஜூனியர் என்டிஆருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை

பிரசாந்த் நீல் இயக்கும் டிராகன் படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த ஜூலை 27ம் தேதி அன்று நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்டிஆரின் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. காயத்திற்கான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, இன்று ஐதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் ஜூனியர் என்டிஆரின் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள ஜூனியர் என்டிஆர், சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளார். அடுத்து 6 முதல் 8 வாரங்கள் வரை அவரை ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதன்பிறகே அவர் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். அதேசமயம் பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆர் அல்லாத மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை தொடர்ந்து படமாக்க திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !