உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹீரோ ஆனார் ரக்ஷன்

ஹீரோ ஆனார் ரக்ஷன்

சின்னத்திரை தொகுப்பாளரான ரக்ஷன் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பெரும்பாலும் ஹீரோவின் நண்பனாக நடித்தார். தற்போது அவர் 'மேரி கோல்ட்' என்ற படத்தின் மூலம் ஹீரோ ஆகியிருக்கிறார். அவருக்கு ஜோடியாக நம்ரிதா நடிக்கிறார். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிக்கிறார். பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார்.

சிங்கம்புலி, வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, விவேக் பிரசன்னா, ஸ்டாலின் மற்றும் வடிவேல் முருகன் ஆகியோர் நடிக்கின்றனர். 'செந்தமிழ்ப் பாட்டு', 'சின்ன மாப்ளே', 'மிஸ்டர் மெட்ராஸ்' ஆகிய படங்களில் இணைந்து நடித்த பிரபு மற்றும் சுகன்யா ஜோடி 31 ஆண்டுகளுக்கு பிறகு இணைகிறார்கள். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்ய, சித்து குமார் இசையமைக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் கூறும்போது “தென் தமிழகத்தின் பின்னணியில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி நகரங்களை சேர்ந்த கதை மாந்தர்களுக்கு இடையே நடைபெறும் சுவாரஸ்யமான போட்டியையும் அலாதியான வாழ்வியலையும் மையமாகக் கொண்டு ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையாக இத்திரைப்படம் உருவாகிறது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

KayD
2026-08-14 14:16:05

Rakshan smart ஆளு தான் but hero material இல்லை. இவ்வளவு நாள் ஹீரோ friend aa vahdhu poi kittu இருந்தார் கொஞ்சம் கஷ்டம் தான்.. சான்ஸ் கிடைச்சு இருக்கு try panattum..