உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இருமுடி படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியா பவானி சங்கர்

இருமுடி படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் பிரியா பவானி சங்கர்

தமிழில் மேயாதமான் படத்தில் அறிமுகமான பிரியாபவானி சங்கர், அதன்பிறகு கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் மற்றும் இந்தியன் 2, டிமான்டி காலனி-2 என பல படங்களில் நடித்தவர், தற்போது டிமான்டி காலனி 3, மரகத நாணயம் 2 மற்றும் தெலுங்கில் ரவிதேஜாவுடன் இருமுடி என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும், தெலுங்கில் 2023-ல் கல்யாணம் கமனீயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பிரியா பவானி சங்கர். அதைத் தொடர்ந்து கோபிசந்துடன் இணைந்து பீமா படத்தில் நடித்தார். துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டு படங்களுமே வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் அடுத்த வாரம் வெளியாகவுள்ள இருமுடி படத்தில் ரவி தேஜாவின் மனைவியாக காவேரி என்ற வேடத்தில் நடித்துள்ளார் பிரியா பவானி சங்கர். அவர் கூறுகையில், இருமுடி படத்தின் மூலம் தெலுங்கில் ஒரு முக்கிய வெற்றியைப் பதிவு செய்து தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார் பிரியா பவானி சங்கர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !