இருமுடி, பெத்லகேம் குடும்ப யூனிட் மற்றும் கலீபா பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரம்
ADDED : 3 hours ago
சிவா நிர்வானா இயக்கத்தில் ரவிதேஜா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி திரைக்கு வந்த படம் இருமுடி. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம், வெளியான இரு தினங்களில் உலக அளவில் 48 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், ஆகஸ்ட் 21ம் தேதி திரைக்கு வந்த மலையாள படம் பெத்லகேம் குடும்ப யூனிட். நிவின் பாலி, மமீதா பைஜு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வெளியான இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபீஸில் 35 கோடி வசூலித்துள்ளது.
ஆகஸ்ட் 20ம் தேதி பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் மலையாளத்தில் திரைக்கு வந்த படம் கலீபா. இப்படம் உலக அளவில் இதுவரை 30 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.