விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தது குறித்து ஆண்டனி வர்கீஸ் வருத்தம்
மலையாள திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் ஆண்டனி வர்கீஸ். சமீபத்தில் வெளியான 'காட்டாளன்' படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த நிலையில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி உள்ள 'ஐ'ம் கேம்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆண்டனி வர்கீஸ். இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறும்போது, விஜய் சாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பை இழந்தது இப்போதும் வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
மாஸ்டர் படத்தில் அர்ஜூன் தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முதலில் எனக்குத்தான் வாய்ப்பு வந்தது. அந்த சமயத்தில் நான் சில படங்களில் ஒப்புக்கொண்டிருந்ததால் என்னால் அதில் நடிக்க முடியாமல் போனது. விஜய் சார் இப்போது முதல்வர் ஆகிவிட்டார்; இனிமேல் அவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான். அந்த வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டோமே என்கிற வருத்தம் எனக்கு இப்போதும் அதிகமாகவே இருக்கிறது என்று கூறினார்.