உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / "நான் ஓய்வு பெறும் காலம் வந்துவிட்டதா?" : டாப்சி வெளிப்படைப் பேச்சு

"நான் ஓய்வு பெறும் காலம் வந்துவிட்டதா?" : டாப்சி வெளிப்படைப் பேச்சு


தமிழில் 'ஆடுகளம்', 'ஆரம்பம்' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் பாலிவுட் நடிகை டாப்சி. சமீப வருடங்களாக பாலிவுட் படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் நடித்துள்ள 'காந்தாரி' திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இது குறித்த புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் டாப்ஸி.

அப்போது அவர் பேசும்போது, சமீப காலத்தில் வெளியாகும் சில குறிப்பிட்ட வகை படங்களைப் பார்க்கும்போது, அதிகப்படியான வன்முறை மற்றும் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்சிகள் ட்ரெண்டாகி வருகின்றன. அத்தகைய படங்களுக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் இருக்கலாம் என்றாலும் கூட, அது போன்ற படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. இந்த படங்களைப் பார்க்கும்போது, என் குடும்பத்தினரிடம் நானே கூட 'நான் ஓய்வு பெறும் காலம் வந்துவிட்டதா?' என்று யோசித்ததாகக் கூறினேன். உண்மைதான் அப்படிப்பட்ட படங்களில் நடிப்பதற்கு பதிலாக, சினிமாவில் இருந்தே முற்றிலும் ஓய்வு பெற்று விடலாம் என்றும் அவர் வெளிப்படையாக மனம் திறந்து கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !