டி.ராஜேந்தரின் இசையில் முதல் முறையாக பாடிய இளையராஜா
மறைந்த இயக்குனர், நடிகர் கே. பாக்யராஜ் நடித்த கடைசி படமான 'கன்னடத்து பைங்கிளி'-யை சாய் ரமணி இயக்க எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
35 ஆண்டுகளுக்கு பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படமும் இது தான். அதுவும் கணவன் மனைவியாகவே நடித்துள்ளனர். இவர்களுடன் புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர். சிங்கம் புலி, புகழ், ஆதவன், லொள்ளு சபா ஜீவா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். கூமாபட்டி தங்கபாண்டி, ஆட்டோக்காரன் தீபக் மற்றும் இடியாப்பம் சிவா உள்ளிட்ட ஐந்து பிரபல யூடியூபர்கள் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகின்றனர்.
டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில் அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். டி.ராஜேந்தர் மற்றும் பாக்யராஜ் இணைந்து பணியாற்றிய ஒரே படமும் இதுதான்.
தமிழ்நாடு - கர்நாடகா எல்லை பகுதியில் அமைந்துள்ள ஓசூரில் 1990களில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.