PUBLISHED ON : டிச 02, 2025 11:27 PM

வித்தியாசமான மரங்கள்
மரங்கள் என்றாலே கிளைகளுடன் வளர்ந்து இருக்கும். கிளை இல்லாத மரங்களும் உள்ளன. பனை, தென்னை மரம் ஆகியவை கிளைகள் இன்றி உயரமாக வளரக்கூடிய மர வகையைச் சேர்ந்தவை. இந்த மரங்களின் தண்டுப்
பகுதியில் 'ஸ்கெலரன்கிமா' எனும் கார்டிகல் நாரிழைகள் காணப்படுகின்றன. இவை எளிமையான திசுக்களால் ஆனவை. இந்த நாரிழைகள் நேராக வளரக்கூடியவை. இவைதான், மரம் உயரமாக வளர்வதற்கான உறுதியை அளிக்கின்றன. அதே நேரம் மரம் கிளை விடவும் இவை அனுமதிப்பதில்லை. அதனால்தான் பனை, தென்னை மரங்களில் கிளை இருப்பதில்லை.


