PUBLISHED ON : டிச 03, 2025 11:35 PM

அறிவியல் ஆயிரம்
தொலைபேசி வரலாறு
உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முடிகிறது. இதற்கு காரணமான தொலைபேசியை கண்டுபிடித்து சாதித்தவர் ஸ்காட்லாந்து விஞ்ஞானி அலெக்ஸாண்டர் கிரகாம் பெல். இவர் பல்வேறு ஆராய்ச்சிக்கு பின் 1876ல் தொலைபேசியை உருவாக்கினார். இதே காலத்தில் அமெரிக்க விஞ்ஞானி எலிஷா கிரே, தொலைபேசியை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டார். இருவரும் ஒரேநாளில் இதற்கான காப்புரிமைக்கு முயற்சித்தனர். இதில் முந்திய கிரகாம் பெல், வரலாற்றிலும் இடம் பிடித்தார்.


