sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 29, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

த.வெ.க., தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா: விஜய், ஓய்வுக்காக ஆஸ்திரேலியா செல்கிறார் என்று பரப்பப்படுகிறது. விஜய், ஆஸ்திரேலியா போகவில்லை; நிலவுக்கு போகிறார். அதற்கான ராக்கெட்டை தயார் செய்வது தி.மு.க., தான். இப்படியான புரளிகளை பரப்புவதே அவர்கள் தான். ஓய்வுக்காக கொடைக்கானல் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இனி நிரந்தரமாக ஓய்வு எடுக்க வேண்டியது தான். தேர்தலில், பணத்தை மட்டுமே தி.மு.க., நம்பியது. ஆனால், அவர்கள் அளித்த பணத்தை, மக்கள் துாக்கி போட்டுவிட்டனர்.

டவுட் தனபாலு: தேர்தல் முடிஞ்ச பிறகும், தி.மு.க.,வையே திட்டுறீங்களே... அ.தி.மு.க., பத்தி எதுவும் விமர்சிக்க மாட்டேங்கிறீங்களே... ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு, அ.தி.மு.க., தயவு தேவைப்படலாம்னு நினைச்சு, இப்பவே அடக்கி வாசிக்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll

புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி: சட்டசபை தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பணம் வாரி வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் போட்டி போட்டு பணத்தை மழையாக பொழிந்துள்ளனர். சாமானியன் அரசியலுக்கு வரும் வாய்ப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. நடுநிலையோடு தேர்தல் கமிஷன் செயல்பட முடியாத நிலை கவலை அளிக்கிறது. தேர்தலில் பணம் தருவது தடுக்கப்பட வேண்டும்; இல்லையெனில், ஜனநாயகம் படுகொலை செய்யப்படும்.

டவுட் தனபாலு: தமிழக தேர்தலில், பணநாயகம் என்பது இனி தவிர்க்கவே முடியாது... தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற கட்சிகள் வீசிய பண மழையில் நீங்க நிறுத்திய உங்க கட்சி வேட்பாளர்கள் எல்லாம், 'டிபாசிட்' தொகையையாவது திரும்ப வாங்குவாங்களா என்பது, 'டவுட்'தான்!

lll

தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: ஓட்டு போட கோடை வெயிலில் வரிசையில் நின்ற மக்கள் அனைவரும், தங்களுடைய வீட்டில் தங்கள் பணிகளை கவனித்து கொண்டிருக்கின்றனர். ஆனால், எப்போதும் பணியில் இருக்க வேண்டிய முதல்வர், குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்றுள்ளார். துணை முதல்வர் உதயநிதி, குடும்பத்தினருடன் அயல்நாட்டு பயணத்தில் உள்ளார்.

டவுட் தனபாலு: இனிமே, மக்களுக்கு பணி செஞ்சு என்ன ஆக போகுது... 'எல்லா சாலைகளும் ரோமை நோக்கி' என்பது போல, எல்லா மக்கள் பணிகளுமே தேர்தலுக்காகத் தான்... அந்த தேர்தலே முடிஞ்சிட்டதால, இனி மக்களை பத்தி யாரும் கவலைப்படுவாங்களா என்பது, 'டவுட்'தான்!

lll

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us