sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு


PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 30, 2026 12:00 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக காங்., துணை தலைவர் கோபண்ணா: காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்து உ ள்ள 'அமெரிக்கை' நாராயணன், 37 ஆண்டுகளாக கட்சி வளர்ச்சிக்கு பாடுபட்டவர். தேர்தலில் சீட் கிடைக்காததால், விலகுவ தாக அறிவித்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட விரக்தி, காங்கிரசில் பலருக்கும் இருக்கிறது. உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை எந்த இயக்கம் வழங்கவில்லையோ, அந்த இயக்கத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகத் தான் போகும்.



டவுட் தனபாலு: தமிழகத்தில் காங்., அதிகாரத்தை இழந்து, 59 வருஷங்களாகிடுச்சு... தொண்டர் களை விட தலைவர்கள் எண்ணிக்கை ஜாஸ்தியா இருக்கிற அந்த கட்சிக்கு என்ன எதிர்காலம் இருக்குது என்ற, 'டவுட்' வருதே!



பா.ம.க., தலைவர் அன்புமணி: கரூர் மாவட்டம், சாலைப்பட்டி கிராமத்தில், தனியாக வாழ்ந்து வந்த மூதாட்டியை மர்ம நபர்கள் படுகொலை செய்து, அவர் அணிந்திருந்த தோடு, மூக்குத்தி போன்ற நகைகளை கொள்ளையடித்து சென்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தி.மு.க., ஆட்சியை அகற்றுவதற்கான தீர்ப்பு எழுதப்பட்ட பின்னரும், கொலை, கொள்ளை அட்டகாசங்கள் தொடர்கின்றன. தி.மு.க., ஆட்சியின் எஞ்சிஇருக்கும் நாட்களிலாவது கொலை, கொள்ளைகள் நடக் காமல், மக்கள் பாதுகாப்பா கவும், நிம்மதியாகவும் வாழ்வதை அரசும், காவல் துறையும் உறுதி செய்ய வேண்டும்.

டவுட் தனபாலு: தி.மு.க.,வினர் முழு அதிகாரத்துடன் இருந்தப்பவே, இதை எல்லாம் கண்டுக்கல... இப்ப, எல்லாரும் சுற்றுலா தலங்களுக்கு போயிட்ட தால, அதிகாரிகளும் அக்கடான்னு இருக்காங்க... புதிய ஆட்சி பதவி யேற்ற பிறகு தான், சட்டம் - ஒழுங்கு நிலவரத்தை எல்லாம் ஏறிட்டு பார்ப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!

பத்திரிகை செய்தி: தமிழக காங்., தலைவர் பதவியை பிடிக்க, எம்.பி.,க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி, சசிகாந்த் செந்தில் மற்றும் தமிழக சட்டசபை காங்., தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இவர்கள் தவிர, தமிழக காங்கிரசின் முன்னாள் தலைவர்கள் தங்கபாலு, திருநாவுக்கரசர், அழகிரி, முன்னாள் எம்.பி., செல்லகுமார் உள்ளிட்டோரும், மாநில தலைவர் பதவியை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.

டவுட் தனபாலு: காங்., கட்சியில் எல்லா முடிவுகளையும், டில்லி மேலிடமான சோனியா குடும்பத்தினர் தான் எடுப்பாங்க. .. தமிழக காங்., தலைவர் பதவிக்கு பெருசா எந்த அதிகாரமும் இல்லை... அலங்கார பொம்மையான அந்த பதவிக்கு ஏன் இப்படி போட்டி போடுறாங்க என்ற, 'டவுட்'தான் வருது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us