/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ அடிமுறையில் 'பட்டாஸ்' கிளப்பும் மாமன்னன்! அரிய கலையை வாழ வைக்க போராடுகிறார் இந்த கலைஞர் அடிமுறையில் 'பட்டாஸ்' கிளப்பும் மாமன்னன்! அரிய கலையை வாழ வைக்க போராடுகிறார் இந்த கலைஞர்
அடிமுறையில் 'பட்டாஸ்' கிளப்பும் மாமன்னன்! அரிய கலையை வாழ வைக்க போராடுகிறார் இந்த கலைஞர்
அடிமுறையில் 'பட்டாஸ்' கிளப்பும் மாமன்னன்! அரிய கலையை வாழ வைக்க போராடுகிறார் இந்த கலைஞர்
அடிமுறையில் 'பட்டாஸ்' கிளப்பும் மாமன்னன்! அரிய கலையை வாழ வைக்க போராடுகிறார் இந்த கலைஞர்
UPDATED : ஜூன் 09, 2024 03:12 AM
ADDED : ஜூன் 09, 2024 12:45 AM

நடிகர் தனுஷ் நடித்த, 'பட்டாஸ்' திரைப்படத்தில் அடிமுறைக் கலைஞர்களாக கலக்கியிருப்பார்கள், தனுசும், சினேகாவும்.
இவர்களுக்கு இக் கலையை கற்றுக் கொடுத்தவர், அடிமுறைக் கலைஞர் செல்வராஜ் ஆசான். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், நடிகர்கள் ஜெயம் ரவி மற்றும் கார்த்தி ஆகியோருக்கு வாள் பயிற்சி அளித்தவரும் இவர்தான்.
'மாமன்னன்' படத்தில் நடித்த நடிகர் உதயநிதிக்கு, இக்கலை குறித்து பயிற்சியளித்துள்ளார். இவர், சிலம்பம் மற்றும் 'கிக் பாக்சிங்'கில் கைதேர்ந்தவர்.
கோவை கற்பகம் பல்கலைக் கழகத்தில் நடந்த, சிலம்பம் போட்டிக்கு வந்திருந்தார். அவரிடம் ஒரு உரையாடல்...
திரைப்படத்தில் வந்த பின் தான், அடிமுறை குறித்து நிறைய பேருக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது. இந்த கலைக்குள் ஆயிரம் போர் தந்திரங்கள் ஒளிந்திருக்கின்றன.
அடிமுறையை, வர்ம அடிமுறை என்று சொல்வது சரியாக இருக்கும். முதல் மூன்று மாதங்களுக்கு உடற்திறன் பயிற்சி அளிப்போம். நான்காவது மாதத்தில் இருந்து கற்பனை சண்டை என்றழைக்கப்படும் சுவடு முறைகள் பயிற்சி, 12 மாதங்கள் கற்றுக் கொடுக்கப்படும். இதில், வணக்கச்சுவடு, நிலை அங்க சுவடு, குரங்கு சுவடு, முதுகு ஒட்டி சுவடு என, 108 சுவடு முறைகள் உள்ளன.
நம் அடிமுறையில் இருந்து பிரிந்ததே, இன்று பலரால் அறியப்படும் கராத்தே, ஜூடோ, குத்துச்சண்டை, வாள் சண்டை, மல்யுத்தம் போன்றவை.இக்கலை பரவலாக மீண்டு(ம்) வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.
இவர், இந்திய வர்ம அடிமுறை சம்மேளன நிறுவனராக உள்ளார். இவரது மனைவியும் சிலம்பக் கலைஞர் தான். இவர்கள், நிறைய சிலம்பக் கலைஞர்களை உருவாக்கி வருவது கூடுதல் சிறப்பு.
இவரை போன்ற ஆசான்கள் இருப்பதால் தான், நமது பாரம்பரியக் கலை இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.