/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ கை, கால் முறிந்தும் குரூப் 4 தேர்வு எழுதிய திருநங்கை கை, கால் முறிந்தும் குரூப் 4 தேர்வு எழுதிய திருநங்கை
கை, கால் முறிந்தும் குரூப் 4 தேர்வு எழுதிய திருநங்கை
கை, கால் முறிந்தும் குரூப் 4 தேர்வு எழுதிய திருநங்கை
கை, கால் முறிந்தும் குரூப் 4 தேர்வு எழுதிய திருநங்கை
ADDED : ஜூன் 10, 2024 12:29 AM

விருதுநகர் : விருதுநகரில் டூவீலர் விபத்தில் கை, கால் முறிந்தும் மனம் தளராமல் குரூப் 4 தேர்வை எழுதிய திருநங்கையை பலரும் பாராட்டினர்.
விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை ரம்யா ஸ்ரீ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட வள அலுவலராக (ஒப்பந்த அடிப்படையில்) பணிபுரிகிறார். அரசு பணியில் சேர தொடர்ந்து போட்டி தேர்வுகளை எழுதி வருகிறார். சில நாட்களுக்கு முன் டூவீலரில் சென்ற போது விபத்தில் கை, கால் முறிந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ரம்யா ஸ்ரீ குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். விருதுநகரில் நேற்று இத்தேர்வை பெற்றோர் உதவியுடன் ஆட்டோவில் வந்து பங்கேற்றார்.
ரம்யா ஸ்ரீ கூறியதாவது: இளங்கலை அறிவியில், ஆசிரியர் பயிற்சி முடித்து அரசு பணியில் சேருவதற்காக தொடர்ந்து தேர்வுகள் எழுதி வருகிறேன். அரசு பணியாளர் தேர்வுகளில் பல முறை வென்றும் திருநங்கைகளுக்கான ஒதுக்கீடு வழங்கப்படாததால் அரசுப்பணியில் சேர முடியவில்லை.
எங்களை போன்றவர்கள் அரசுப்பணியில் சேருவதை ஊக்கப்படுத்த ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.