தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/இது உங்கள் இடம்/ தேச துரோகம் தானே இது?

 தேச துரோகம் தானே இது?

 தேச துரோகம் தானே இது?

1


PUBLISHED ON : ஜூன் 27, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 27, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.முகுந்தன், புதுச்சேரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சாமானியர்களான நாம் வீடு மாறினாலே, அந்த மாற்றத்தை வாக்காளர் பட்டியலில் பதிவேற்ற, நாக்கு தள்ளுகிறது.

ஆனால், நடிகர் பிரகாஷ் ராஜ், கர்நாடகா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா என்று நான்கு மாநிலங்களில் தன்னை வாக்காளராக பதிவு செய்து, அந்தந்த மாநிலங் களின் வாக்காளர் அடையாள அட்டையை வைத்துள்ளார்.

இப்படி போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் இந்த உத்தமர் தான், காங்கிரஸ், தி.மு.க., கட்சிகளுடன் இணைந்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து பலவாறாக கூக்குரலிட்டவர்!

பிரகாஷ் ராஜ் வைத்துள்ள போலி வாக்காளர் அடையாள அட்டை குறித்து, வழக்கறிஞர் திலீப்குமார், 2019லேயே பெங்களூரின் ஹலசூரு கேட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருக்கிறார்; அங்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றதும், தேர்தல் கமிஷனிடமும் புகார் அளித்துள்ளார்.

அங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பெங்களூரின், 48வது கூடுதல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரை ஏற்ற நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி இரண்டு முறை சம்மன் அனுப்பியும், பிரகாஷ்ராஜ் கண்டுகொள்ளாததால், இப்போது ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்டை பிறப்பித்துள்ளது.

நம் அரசியலமைப்பு சட்டப்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராக பதிவு செய்வது, சட்ட விரோதம்!

ஆனால், நான்கு மாநிலங்களில், வாக்காளராக பதிவு செய்த விஷயம், 2019லிலேயே தெரிந்தும், அதுகுறித்த நடவடிக்கை எடுக்காத தேர்தல் கமிஷனை என்னவென்று சொல்வது?

இன்னும் எத்தனை மாநிலங்களில் பிரகாஷ்ராஜ் போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளாரோ?

ஊடுருவல்காரர்களுக்கும், இவருக்கும் என்ன வித்தியாசம்? தேச துரோகம் தானே இது?

இதுபோன்ற சமூக புல்லுருவிகளுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்தால் மட்டும் போதாது; ஆயுளுக்கும், எந்த தேர்தலிலும் ஓட்டளிக்க முடியாதபடி தடையுத்தரவு பிறப்பிக்க வேண்டும்!

.....

வாழ்வில் ஒளியேற்றுமா?


வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க சட்டப்படி அனுமதியில்லை. ஆனாலும், தமிழகத்தில் இஸ்லாமியருக்கு, 3.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இதுபோதாது என்று, தற்போது, அதை 5 சதவீதமாக உயர்த்த வேண்டுமென்று குரல் எழுப்புகின்றனர்.

ஹிந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியோருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் கிடையாது என்று சட்டம் கூறுகிறது. ஆனால், மதம் மாறியவர்களுக்கும் பழைய இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர வேண்டும் என்று குரல் எழுப்புகிறது ஒரு கூட்டம்.

அதேநேரம், பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அளித்தும் அதை, திராவிட கட்சிகள் தமிழகத்தில் அமல்படுத்த மறுத்து விட்டன. இதனால், லட்சக்கணக்கான ஏழை - எளியோர் பாதிக்கப் படுகின்றனர்.

பொதுப் பிரிவினரின் ஓட்டு வேண்டும்; ஆனால், அவர்களுக்கான உரிமைகளை தரமாட்டோம் என்று கூறிய கட்சிகள் தேர்தலில் மண்ணைக் கவ்வி, ஆட்சியை இழந்து விட்டன.

புதிய அரசாவது மத்திய அரசு அறிவித்துள்ள, 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, பொதுப் பிரிவினரின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்!

----

சேமிப்பு கிடங்குகள் அமையுமா?


த.ராம்மோகன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் பகுதியில், திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த, 600 நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகியுள்ளன.

போதிய சேமிப்பு கிடங்குகள் இல்லாததால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை சிமென்ட் தரையில் அடுக்கி, தார்ப்பாயால் மூடி, கிடங்கு உரிமையாளர்கள் பாதுகாக்கின்றனர் .

லாரி பற்றாக்குறை மற்றும் நிர்வாகத் தாமதத்தால் திறந்தவெளியில் தேங்கும் நெல் மூட்டைகள், எலிகள், பறவைகளால் சேதமடைவதுடன், மழையில் நனைந்தும் வீணாகின்றன.

இத்தகைய இழப்புகளைத் தவிர்க்க, மாவட்டத்திற்கு இரண்டு அல்லது மூன்று பாதுகாப்பான சேமிப்புக் கிடங்குகளை அமைக்க வேண்டும்.

அரசு இவ்விஷயத்தை கவனத்தில் கொள்ளுமா?

-----

கையேந்த வேண்டாமே!


ரா.தங்கசாமி, அகஸ்தியாபட்டி, நெல்லை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: மேகதாது அணை விவகாரம் கர்நாடகா, தமிழகம் என, இரு மாநிலங்களிலும் சூட்டைக் கிளப்பியுள்ளது. காவிரி நீருக்காக இவ்வளவு போராடும் நாம், மழை நீரை சேகரிக்க நினைப் பதில்லை.

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு இன்றும், 'கிருஷ்ணா... கிருஷ்ணா' என கூவி அழைத்து, ஆந்திராவின் கிருஷ்ணா நதி நீருக்காக தவம் கிடக்கிறோமே தவிர, நம்மிடம் இருக்கும் கூவம் ஆற்றை நாற்ற மடிக்க வைத்துள்ளோம்.

பெங்களூரு வளர்ந்து வரும் பெருநகரம்; தமிழகத்தை சேர்ந்த பல லட்சம் பேர் அங்கு பணியாற்றுகின்றனர். இதை கருத்தில் வைத்து தான், கர்நாடக முதல்வர் சிவகுமார், 'பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்காக தான் மேகதாது அணை கட்டப் போகிறோம்; அதில் இருந்து ஒரு வாளி தண்ணீர் கூட விவசாயத்துக்கு எடுக்க மாட்டோம்' என்று சத்தியம் அடிக் காத குறையாக கூறுகிறார்.

ஆனால், மேகதாது அணை கட்டினால், தஞ்சை பாலைவனமாகி விடும் என்பது சர்வ நிச்சயம். அதனால், இரு மாநில முதல்வர்களும், நீர்வளத்துறை நிபுணர்களும் ஒன்றாக அமர்ந்து, பேசித்தீர்வு காண முயற்சி எடுக்க வேண்டும்.

அதேபோன்று, 'நீரின்றி அமையாது உலகு' எனும் நிதர்சனத்தை புரிந்து, மழை நீரை சேமிக்கும் விதமாக மாவட்டந்தோறும் சிறு அணைகளை கட்ட வேண்டும்; இருக்கும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். மழை நீரையும், உபரி நீரையும் தேக்கினால், பாசன தேவைக்காக பிற மாநிலங்களிடம் கையேந்தும் நிலை ஏற்படாது!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us