Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : ஏப் 19, 2026 01:05 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 19, 2026 01:05 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேச்சு: கடலுார் தொகுதி காங்., வேட்பாளர் சந்திரசேகரனை வெற்றி பெற செய்ய வேண்டும். அப்போது தான், ஒவ்வொரு வீட்டிற்கும், 8,000 ரூபாய் பரிசு கூப்பன் வழங்கப்படும். மகளிர் உரிமைத்தொகை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். மீண்டும், 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் சிறந்த திட்டத்தை வழங்கிய சிறந்த முதல்வரை நாம் பெற்றுள்ளோம். தி.மு.க., வாக்குறுதிகளையா சொல்லி ஓட்டு கேட்கிறாரே... காங்., சார்பில், வாக்காளர்களுக்கு வழங்க உருப்படியான வாக்குறுதிகள் எதுவுமே இல்லையா?

தமிழ்நாடு தன்னுரிமை கழக தலைவரும், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பழ.கருப்பையா பேச்சு: அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, தன் ஆட்சியின் போது தமிழகத்தில் குடிமராமத்து திட்டம் மூலம், ஏரி, குளம், குட்டைகளை சீர்படுத்தி, விவசாயத்தை பெருக்கினார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம், காவிரி - குண்டாறு இணைப்பு, மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை, 100 ஏரிகளுக்கு கொண்டு செல்லும் மகத்தான மூன்று திட்டங்களை தொடங்கி வைத்தவரும் பழனிசாமி தான்.

ஆனா, இந்த திட்டங்கள் எல்லாம், இன்றைய தி.மு.க., ஆட்சியில் எங்கே என தேட வேண்டிய நிலையில் தான் இருக்குது!

தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி: மத்திய பா.ஜ., அரசு, தமிழகத்திற்கு தொடர்ந்து திட்டங்களை மறுத்து வருகிறது. தற்போது, தொகுதி மறுவரையறை மசோதா என்ற பெயரில், தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கக்கூடிய வகையில் செயல்பட்டு வருகிறது. மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவதற்கு, தமிழக மக்கள் இந்த தேர்தலில் நிச்சயமாக பதிலடி தருவர்.

லோக்சபா தொகுதிகள் தொடர்பான பிரச்னையை, சட்டசபை தேர்தலில், 'கோர்த்து' விட பார்க்கிறாரே!

தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முரட்டு அடிமை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி என்றால், பழனிசாமிக்கு முரட்டு அடிமை, திருமங்கலம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உதயகுமார். எம்.எல்.ஏ., சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் என பதவிகள் வகித்தாலும், திருமங்கலம் தொகுதிக்கு ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்துள்ளாரா?

உதயகுமார், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., என்பதால், கேட்ட திட்டங்களை எல்லாம் இவங்க உடனே கொடுத்திருப்பாங்களா என்ன?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap