Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

1


PUBLISHED ON : ஏப் 20, 2026 01:37 AM

Follow on Google

PUBLISHED ON : ஏப் 20, 2026 01:37 AM

1


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய, கம்யூ., கட்சியின் மாநில செயலர் வீரபாண்டியன் பேட்டி:

ஏழை, எளிய மக்களின் சூழல் குறித்தெல்லாம், பா.ஜ.,வினருக்கு எந்த கவலையும் இல்லை. அவர்களுக்கு அது குறித்தெல்லாம் முழுமையாக தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மத அடிப்படை வாதம் மட்டும் தான். இந்தியாவின் பன்முக அரசியல், மதச்சார்பின்மையை அவர்கள் கற்க, பல ஆண்டுகள் ஆகும். நாடு முழுதும் மக்களின் ஒற்றுமையை சிதைப்பதே, பா.ஜ.,வின் நோக்கம்.

பா.ஜ., ஆட்சி நடக்கும் மாநிலங்களில் எல்லாம், ஒற்றுமைக்கு எந்த பங்கமும் வந்த மாதிரி தெரியலையே... இவங்க தான் இப்படி பூச்சாண்டி காட்டி, மக்களை பயமுறுத்திட்டு இருக்காங்க!

தமிழக, பா.ஜ., தொழில் துறை வல்லுநர் அணி தலைவர், எஸ்.சுந்தர்ராமன் அறிக்கை:



மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் தோல்வி, எதிர்க்கட்சிகளின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்துகிறது. பெண்கள் அதிகாரம் பெறுவது பற்றி உரக்கப்பேசும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், தேவைப்பட்ட நேரத்தில், அந்த மசோதாவிற்கு துணை நிற்க தவறி விட்டன. இது, வெறும் அரசியல் எதிர்ப்பு மட்டுமல்ல; இந்தியா முழுதும் உள்ள பெண்களுக்கு செய்யப்பட்ட அப்பட்டமான துரோகம்.

தி.மு.க., கூட்டணியில் உள்ள கட்சிகளில், தே.மு.தி.க., தவிர எந்த கட்சியிலாவது பெண்கள், தலைமை பதவியில் இருக்காங்களா... இது தான், மகளிருக்கு அவங்க அதிகாரம் தந்திருக்கிற லட்சணம்!

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு:

கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், நாங்கள் பிரிந்து கிடந்த காரணத்தால், தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. ஜெயலலிதா வளர்த்த பிள்ளைகள் அனைவரும், கருத்து வேறுபாடுகளை எல்லாம் துாக்கி எறிந்து விட்டு, தி.மு.க.,வை வீழ்த்த ஒன்று சேர்ந்து உள்ளோம்.

'அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன் சேருவதை விட துாக்கில் தொங்கிடலாம்'னு பேசியவர், தி.மு.க.,வை வீழ்த்தணும் என்பதற்காக, இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்காரே!

பா.ஜ., தேசிய செய்தி தொடர்பாளர் கோபாலகிருஷ்ண அகர்வால் பேட்டி:

தமிழகத்தில், ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஓட்டு வங்கி கலாசாரத்துடன், சிறுபான்மை மக்களை ஏமாற்றி வைத்துள்ளது. தமிழகத்தில், மக்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் எதுவும் இல்லை. தமிழகத்தை பாதுகாக்க, பா.ஜ., அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தை வளர்ச்சி பெற்ற முன்னணி மாநிலமாக உயர்த்த வேண்டும் என்பதே, தே.ஜ., கூட்டணியின் முக்கிய நோக்கம். அதற்கு, சிறுபான்மையினரும் ஆதரவளிக்க வேண்டும்.

காலம் காலமாக, தி.மு.க.,வையே ஆதரித்து வரும் சிறுபான்மையினர், இந்த தேர்தலில் மட்டும் தடம் மாறிடுவாங்களா என்ன?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap