தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/ பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : ஆக 11, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 11, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக முதல்வர் விஜய் மகனும், திரைப்பட இயக்குநருமான ஜேசன் சஞ்சய் பேச்சு:


நான் எவ்வளவு வளர்ந்தாலும், என் அம்மா இன்றும் என்னை ஒரு குழந்தையாகவே பார்க்கிறார். நான் வேலையில், 'பிசி'யாக இருப்பதால், முன்பு போல் அம்மாவுடன் அதிக நேரம் செலவழிக்க முடியவில்லை. அவர் தொடர்ந்து நலம் விசாரிப்பார். வேலையில் நான் சோர்வு அடையும் போது என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவார். நான் இயக்கிய படத்தை பார்த்து, அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதற்காக காத்திருக்கிறேன்.

நீங்க இயக்கிய படம் எப்படியிருந்தாலும், அதை பார்க்க, உங்க அப்பாவின் கட்சியினர் தமிழகம் முழுக்க தயாராவே இருக்காங்க!

பா.ஜ., தமிழக பொதுச்செயலர் வினோஜ் செல்வம் அறிக்கை:


தமிழகத்திற்கு இதுவரை காவிரியில், 40 டி.எம்.சி., தண்ணீர் வந்திருக்க வேண்டும். ஆனால், 4 டி.எம்.சி., தண்ணீர் தான் வந்திருக்கிறது. தன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் யோசனைப்படி, தமிழகத்திற்கு சாதகமான தொகுதி மறுவரையறைக்கு எதிராக, அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்தை கூட்டிய முதல்வர் விஜய், அதே கர்நாடக அரசிடம் பேசி, காவிரி தண்ணீரை கொண்டு வராமலும், காவிரி நீர் விவகாரத்திற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாமலும், விவசாயிகளை கைவிட்டு விட்டார்.

தமிழகத்திற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கும், கர்நாடக பா.ஜ., தலைவர்களை முதல்ல நீங்க சமாதானப்படுத்திட்டு, அப்புறம் விஜய் அரசை கேள்வி கேட்கலாமே!

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி பேட்டி:


பார்லிமென்ட் எம்.பி.,க்களின் எண்ணிக்கையை, 815 அல்லது 850 ஆக உயர்த்தி, அதே 7.18 சதவீதம் பிரதிநிதித்துவத்தை தமிழகத்திற்கு கொடுத்தாலும், அதனால் எந்தவித பயனும் இல்லை. ஏற்கனவே இருக்கும், 543 எம்.பி.,க்களுக்கே பார்லிமென்டில் பேசுவதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. அதனால், தொகுதி மறுவரையறை வேண்டாம்.

இப்ப மட்டும் பார்லிமென்டில், உங்க கட்சியினர் உருப்படியா பேசுறாங்களா...? கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி, சபைகளை ஒத்திவைக்க தானே செய்றீங்க!

நீலகிரி தி.மு.க., - எம்.பி., ராஜா பேச்சு:


ஒரு படித்த மனிதனின் அறிவு, அவனது சமூகத்திற்கு பயன்படாமல் சமூகத்திற்கு எதிராகத் திரும்புமானால், அவன் விலங்கைவிட கொடியவன். மாணவர்களின் படிப்பு என்பது வெறும் ஏட்டுப் படிப்பாகவோ, பதவி பெறுவதற்காகவோ அல்லது பணம் சம்பாதிப்பதற்காகவோ மட்டுமே பயன்படும் என்ற நிலை இருந்தால், இந்தியாவில் மத சண்டைகளும், பிளவுகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

அதே மாதிரி, அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்யாமல், ஊழல் செய்றவங்களுக்கு என்ன பெயர் சூட்டலாம்னும் நீங்க யோசனை தரலாமே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us