Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை: கைமாறு செய்திடுவோம்!

கவிதைச்சோலை: கைமாறு செய்திடுவோம்!

கவிதைச்சோலை: கைமாறு செய்திடுவோம்!


PUBLISHED ON : மே 10, 2026

Follow on Google

PUBLISHED ON : மே 10, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 10 - அன்னையர் தினம்

கருவறையில் காத்தவளை

கண்மணியெனத் தாங்கியவளை

கனிவான சொற்களாலே

கண்ணியமாகப் போற்றிடுவோம்!

பசித்த பொழுதுகளில் எல்லாம்

பாசமுடன் உணவளித்தவளை

பாச மலர்கள் துாவி

பாராட்டி வாழ்த்திடுவோம்!

உடல் சோர்வு வந்த போதும்

சொல்லாமல் உழைத்தவளின்

உணர்வுகளை புரிந்துகொண்டு

இன்சொல்லால் நெகிழ்த்திடுவோம்!

துயரம் சூழ்ந்த வேளைகளில்

துணையாக நின்றவளை

ஆறுதலான வார்த்தைகளால்

அரவணைத்துக் காத்திடுவோம்!

நாம் நோயில் வீழ்ந்தால் ஊண் உறக்கம் துறந்தவளை

நெஞ்சார்ந்த நன்றியாலே

மரியாதை செலுத்திடுவோம்!

தோல்விகள் துரத்தும் போதும்

நம்பிக்கை ஊட்டியவளை

கடைசி வர நினைவில் வைத்து

கடவுளாகப் பூஜித்திடுவோம்!

அன்னையெனும் அருந்தெய்வம்

கண்ணெதிரே உள்ளப்போதே

கலப்படமில்லா அன்புடன்

அவளுக்கு கைமாறு செய்திடுவோம்!

- வ.முருகன், விழுப்புரம் .

தொடர்புக்கு: 97156 40263.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap