Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

இதப்படிங்க முதல்ல...

PUBLISHED ON : ஜூன் 09, 2024


Google News
Latest Tamil News
ராஜமவுலியின், இரண்டு மெகா திட்டங்கள்!

பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களை அடுத்து, மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார், ராஜமவுலி.

'மகாபாரதம் கதையை, அவெஞ்சர்ஸ், அவதார் போன்று, உலக சினிமாவையே வியக்கும் வகையில் எடுக்க வேண்டும் என்பதே, என் எதிர்கால திட்டம். மேலும், அனிமேஷன் படம் எடுக்க வேண்டும் என்ற, பெரிய கனவும் எனக்கு இருக்கிறது.

'அனிமேஷன் யுக்திகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், பாகுபலி அனிமேஷன் படத்துக்கு நான் ஒப்புக்கொண்டேன்...' என்று கூறுகிறார், ராஜமவுலி.

சினிமா பொன்னையா

நயன்தாரா கொடுத்த, 'ஷாக்!'

ஷாருக்கானுடன், ஜவான் படத்தில் நடித்த பின், தன் படக்கூலியை, 10 கோடி ரூபாயாக உயர்த்தினார், நயன்தாரா. ஆனபோதும், கோலிவுட்டில், யாரும் அவருக்கு ஐந்து கோடிக்கு மேல் கொடுக்க தயாராக இல்லை. எப்படியும், 10 கோடி ரூபாயாக சம்பளத்தை உயர்த்தியே தீருவது என, உறுதியுடன் இருக்கிறார், நயன்தாரா.

தற்போது, நடிகை கீது மோகன்தாஸ் இயக்கத்தில், கன்னட நடிகர், யஷ் நடிக்கும், டாக்ஸிக் என்ற படத்தில், அவருக்கு அக்காவாக நடிக்க அழைப்பு விடுத்தனர். அப்போது, 'அக்கா வேடத்தில் நடிப்பதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அப்படி நடிப்பதற்கு, 10 கோடி ரூபாய் தர வேண்டும்...' என்று, கிடுக்கிப்பிடி போட்டுள்ளார், நயன்தாரா.

— எலீசா

பாலிவுட் ஸ்டைலில், கீர்த்தி சுரேஷ்!

தற்போது, ஹிந்தியில், பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார், கீர்த்தி சுரேஷ். இந்த படத்தில் நடிக்கத் துவங்கியதில் இருந்தே, பாலிவுட் நடிகையருக்கு, 'டப்' கொடுக்கும் வகையில், பொது இடங்களுக்கு, கவர்ச்சிகரமான மாடர்ன் உடை அணிந்து வருகிறார்.

தன் தோற்றத்தில் மேலும் வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்பதற்காக, தற்போது, 'ஹேர் ஸ்டைலை'யும் சுருள் வடிவத்திற்கு மாற்றி, புது பொலிவுடன் காட்சியளிக்கிறார், கீர்த்தி சுரேஷ்.

— எலீசா

'மல்டி ஹீரோ' படங்களில் நடிக்க விரும்பும், சூரி!

காமெடியன் சூரி, தற்போது, 'ஹீரோ' அவதாரம் எடுத்துள்ள நிலையில், கருடன் படத்தில், அவருடன், சசிகுமார், சமுத்திரக்கனி போன்றோர் இணைந்து நடித்தனர்.

அடுத்தபடியாக சில மேல் தட்டு, 'ஹீரோ'களுடன் இணைந்து நடித்து, தன், 'ஹீரோ இமேஜை' உயர்த்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார், சூரி. அதற்காக, தன் நட்பு வட்டார இயக்குனர்களிடம், 'மல்டி ஹீரோ' கதைகளில் நடிப்பதற்கு, தன்னை அழைக்குமாறு, வேண்டுகோள் வைத்துள்ளார்.

சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!

கடந்த, ஒன்பது ஆண்டுகளுக்கு முன், உலக நடிகர் நடித்த படம், 'அட்டர் பிளாப்' ஆன நிலையில், அந்த பட நிறுவனத்திற்கு, தான் ஒரு படம் நடித்து தருவதாக உத்தரவாதம் கொடுத்திருந்தார். ஆனால், இப்போது வரை, அவர், அப்படத்தில் நடித்துக் கொடுக்க முன்வரவில்லை.

இதன் காரணமாக, தயாரிப்பாளர் கவுன்சிலுக்கு, உலக நடிகரை வரவைத்து, பஞ்சாயத்து நடத்த திட்டமிட்டு இருந்தது, அந்த பட, நிறுவனம். ஆனால், அவர் ஆஜராகாமல், 'டேக்கா' கொடுத்து விட்டார்.

இதனால், அதிர்ச்சி அடைந்த படத் தயாரிப்பாளர், உலக நடிகருக்கு, 'ரெட் கார்ட்' போட வேண்டும் என, கொடி பிடித்து வருகிறார். அவருக்கு, மேலும் சில தயாரிப்பாளர்களும் ஆதரவு கொடுப்பதால், உலக நடிகருக்கு, 'ரெட் கார்டு' போட வேண்டும் என்ற அழுத்தம், அதிகரித்து வருகிறது.

சினி துளிகள்!

* விக்ரம் படத்தை அடுத்து, இந்தியன்- - 2, தக்லைப், கல்கி 2898 ஏடி போன்ற படங்களில் நடித்து வருகிறார், கமல். அடுத்து, இரட்டை ஸ்டன்ட் மாஸ்டர்களான, அன்பறிவு இயக்கும், 'ஆக் ஷன்' படத்தில் நடிக்கப் போகிறார்.

* மாஸ்டர், லியோ படங்களை இயக்கிய, லோகேஷ் கனகராஜ், அடுத்து, ரஜினி நடிக்கும், கூலி படத்தை இயக்குகிறார். அப்படத்தை இயக்க, அவர், 50 கோடி ரூபாய், சம்பளம் பேசி இருக்கிறார்.

* விக்ரம் நடித்து வரும், வீர தீர சூரன் படத்தில், அவருக்கு ஜோடியாக, சார்பட்டா பரம்பரை படத்தில், ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த, துஷாரா விஜயன் நடித்து வருகிறார்.

அவ்ளோதான்!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us