/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காதலித்த பெண்ணிடம் நெருக்கம் நண்பனை கொன்ற 5 பேர் கைது காதலித்த பெண்ணிடம் நெருக்கம் நண்பனை கொன்ற 5 பேர் கைது
காதலித்த பெண்ணிடம் நெருக்கம் நண்பனை கொன்ற 5 பேர் கைது
காதலித்த பெண்ணிடம் நெருக்கம் நண்பனை கொன்ற 5 பேர் கைது
காதலித்த பெண்ணிடம் நெருக்கம் நண்பனை கொன்ற 5 பேர் கைது
ADDED : செப் 04, 2025 03:36 AM

கலபுரகி: தான் காதலிக்கும் பெண்ணை காதலித்ததால், தொழிலாளியை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கலபுரகி மாவட்டம், ஹிராபூர் கிராமத்தின் அருகில் உள்ள சுடுகாட்டில் கடந்த மாதம் 25ம் தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அசோக் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில், இறந்தவர் அதே கிராமத்தை சேர்ந்த மாரப்பா கட்டிமணி, 23, என்பது தெரிய வந்தது. அவரின் தந்தை போலீசில் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக நகர போலீஸ் கமிஷனர் சரணப்பா நேற்று அளித்த பேட்டி:
ஹிராபூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் கொலை செய்யப்பட்ட மாரப்பா கட்டிமணி, அங்குள்ள செங்கல் சூளையில் தொழிலாளியாகவும், வாகன ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். கடைசியாக, சிலருடன் சுடுகாட்டில் மது அருந்திக் கொண்டிருந்ததாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில், சஞ்சய், 23, பவன், 29, ராகுல், 20, லட்சுமிகாந்த், 23, ஆதர்ஷ், 21, ஆகிய ஐந்து பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சஞ்சய், ஒரு இளம்பெண்ணை காதலித்துள்ளார். அதே பெண்ணை, மாரப்பா கட்டிமணியும் காதலித்துள்ளார்.
சமீபத்தில் மாரப்பாவுடன் இளம்பெண் அதிக நேரம் செவழித்து வந்தார். இது சஞ்சய்க்கு கோபத்தை ஏற்படுத்தியது. 'அந்த பெண்ணை விட்டு விலகிவிடு' என்று எச்சரித்தும் மாரப்பா கேட்கவில்லை.
இதனால் கோபமடைந்த சஞ்சய், தன் நண்பர்களுடன் சேர்ந்த மாரப்பா கட்டிமணியை கொலை செய்தார். கொலையில் தொடர்புடைய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.