/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமைச்சர் பெயரில் மோசடி பெண்ணுக்கு எதிராக போராட்டம் அமைச்சர் பெயரில் மோசடி பெண்ணுக்கு எதிராக போராட்டம்
அமைச்சர் பெயரில் மோசடி பெண்ணுக்கு எதிராக போராட்டம்
அமைச்சர் பெயரில் மோசடி பெண்ணுக்கு எதிராக போராட்டம்
அமைச்சர் பெயரில் மோசடி பெண்ணுக்கு எதிராக போராட்டம்
ADDED : செப் 04, 2025 03:39 AM

மைசூரு: சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா பெயரில், பலரை மோசடி செய்து லட்சக்கணக்கான ரூபாய் வசூலித்த பெண் மீது, வழக்குப் பதிவாகியுள்ளது.
மைசூரு மாவட்டம், டி.நரசிபுரா தாலுகாவின், கொளத்துார் கிராமத்தில் வசிப்பவர் ஜோதி, 35. இவர் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக, அக்கம் பக்கத்தினரை நம்ப வைத்தார்.
சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பாவை தனக்கு நன்கு அறிமுகம் உள்ளது. அவர் மூலமாக அரசின் வெவ்வேறு சலுகைகள், கடனுதவி கிடைக்க செய்வதாக, அவர்களிடம் ஆசைவார்த்தை கூறினார்.
இதை நம்பிய பெண்கள், இளைஞர்கள் தங்களுக்கு அரசின் சலுகைகள், கடனுதவி பெற்றுத்தரும்படி லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்தனர். இதுவரை 27 லட்சம் ரூபாய் வசூலித்ததாக தெரிகிறது. அரசு சலுகையோ, கடனுதவியோ கிடைக்கவில்லை.
இதுகுறித்து கேட்டால் அலட்சியமாக பதில் அளிக்கிறார். இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்த நுாற்றுக்கணக்கான பெண்களும், இளைஞர்களும் தலக்காடு போலீஸ் நிலையம் முன் குவிந்து, நேற்று போராட்டம் நடத்தினர்.
தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும், ஜோதியை கைது செய்யும்படியும் வலியுறுத்தினர். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை துவக்கியுள்ளனர்.