/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரு குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சருக்கு ஐகோர்ட் கண்டனம்பெங்களூரு குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சருக்கு ஐகோர்ட் கண்டனம்
பெங்களூரு குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சருக்கு ஐகோர்ட் கண்டனம்
பெங்களூரு குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சருக்கு ஐகோர்ட் கண்டனம்
பெங்களூரு குண்டுவெடிப்பு: மத்திய அமைச்சருக்கு ஐகோர்ட் கண்டனம்
ADDED : ஜூலை 11, 2024 06:13 AM

சென்னை : பெங்களூரு, 'ராமேஸ்வரம் கபே' ஓட்டலில், கடந்த மார்ச்சில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே, 'தமிழகத்தில் பயிற்சி பெற்று வருவோர், இங்கு வெடிகுண்டுகள் வைக்கின்றனர்' என, பேசினார்.
இதற்கு அவருக்கு எதிராக, மதுரையை சேர்ந்த தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின்படி, வன்முறையை துாண்டுதல் உள்பட நான்கு பிரிவுகளின் கீழ், மதுரை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஷோபா கரண்ட்லாஜே மனு தாக்கல் செய்தார். இந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''அரசியல் உள்நோக்குடன் வழக்கு பதியப்பட்டுள்ளது. போலீசார் விசாரணையை மேற்கொள்ள இடைக்கால தடை விதிக்க வேண்டும்,'' என்றார்.
போலீசார் சார்பில், அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் ஆஜராகி, ''மனுதாரர், உள்நோக்குடன் பொது வெளியில் பேசிய வீடியோக்கள் உள்ளன. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதங்களை முன்வைக்க இருப்பதால், வரும் 12ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்,'' என்றார்.
அப்போது, 'விசாரணை தள்ளிவைப்பதாக இருந்தால், மனுதாரருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்' என, மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது.
அதை ஏற்க மறுத்து, நீதிபதி கூறியதாவது: ராமேஸ்வரம் ஓட்டலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வைத்ததாக கூறினாரா, இல்லையா? அவ்வாறு மனுதாரர் கூறியிருந்தால், அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
சென்னையில் என்.ஐ.ஏ., விசாரணை அமைப்பு சோதனை நடத்தும் முன், இவ்விவகாரம் தொடர்பாக கருத்து கூறியுள்ளார். அப்படியானால், மனுதாரருக்கு சம்பவம் தொடர்பான உண்மை தகவல் தெரிந்துள்ளது என்று தானே அர்த்தம்? அதாவது, பயிற்சி பெற்ற நபர்கள் யார், அவர்களுக்கு பயிற்சி அளித்தவர்கள் யார், அவர்கள் என்ன செய்தனர்என்பது தெரியும்.
சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் கிடைத்திருந்தால், முதலில் அதை காவல் துறையிடம் தெரிவித்திருக்க வேண்டும், பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், அமைச்சர் அதைச் செய்யவில்லை. இவ்வாறு கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.